October 14, 2009

இளிச்சவாயர்களை அடையாளம் காண பத்து வழிகள்..!!!

இந்த உலகத்தில் அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - இளிச்சவாயர்கள். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய" இந்தக் கைப்பிள்ளைகளை அடையாளம் காண எளிமையான வழிகள் இங்கே..

--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காதலியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு கீசெயின் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும் காதலிக்கு வாங்கிய ஏதாவது ஒரு பொருளுக்கு ப்ரீயாக கொடுத்து இருப்பார்கள். "அவ அன்புக்கு முன்னாடி காசெல்லாம் தூசு" என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் அவள் அண்ணா என்று சொல்லி டாட்டா காட்டிவிட்டுப் போகும் வரை.

--> மழை பெய்த ரோட்டில் வண்டியில் போகும்போது, பக்கத்தில் நடப்பவர்கள் மீது தண்ணீர் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் கார்க்காரன் இவர்களின் மீது சாக்கடை நீராபிஷேகம் செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.

--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்ற கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.

--> டிராபிக் சிக்னலில் மிகச்சரியாக ஸ்டாப் கோடுக்கு வெகுமுன்பாகவே வண்டியை நிறுத்தி விடுவார்கள். சிவப்பு பச்சையாக மாறும்வரை பொறுமையாகக் காத்திருந்துதான் போவார்கள். இதனால் பின்னால் நிற்கும் லாரிக்காரனிடம் வண்டி வண்டியாய் திட்டு வாங்குவார்கள்.

--> வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அடுத்தவங்க பொல்லாப்பு நமக்கு எதுக்கு" என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

--> பஸ் பிரயாணத்தில் பக்கத்து சீட்டு பயணியிடம் புத்தகத்துக்காக தொங்கிக் கொண்டே வருவார்கள். இறங்கும் இடம் வருபோதுதான் புத்தகம் இவர்கள் கைக்கு வரும். கடைசியில் பார்த்தால் அது இவர்கள் வாங்கிய புத்தகமாக இருக்கும்.

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.

--> ஆபிசில் லீவே போட மாட்டார்கள். மற்றவர்கள் வேலையையும் இவர்களே பார்ப்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்து சீட்காரர் செய்த தப்புக்கும் சேர்த்து இவர்களே திட்டு வாங்கிக் கொள்வார்கள்.

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். போடுறது மசமொக்கையா இருந்தாலும், பழகுன தோஷத்துக்கு படிக்குற மக்கள், நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.. ஆகா நாம சூப்பரா எழுதுறோம் போலவேன்னு கற்பனை கோட்டை கட்டிக்குவாங்க. ( நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)

டிஸ்கி: இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. அதனால யாரும் "நீயும் இளிச்சவாயன்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..

42 comments:

சென்ஷி said...

கடைசி பாயின்ட் நல்லா இருக்குங்க :)

மேவி... said...

semaiya irukkuppaaa

மேவி... said...

அப்ப நீங்க (நான்) நல்லவனா கெட்டவனா

Robin said...

:)

vasu balaji said...

அட கடைசில சொன்னது அப்புடித்தானா. அவ்வ்வ்வ். இப்புடி ஒரு பிட்ட போட்டு இனிமே யார் பாராட்டினாலும் சத்தியம் கேக்க வச்சிட்டீங்களே:))

நாமக்கல் சிபி said...

//கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காதலியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு கீசெயின் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும் காதலிக்கு வாங்கிய ஏதாவது ஒரு பொருளுக்கு ப்ரீயாக கொடுத்து இருப்பார்கள். "அவ அன்புக்கு முன்னாடி காசெல்லாம் தூசு" என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் அவள் அண்ணா என்று சொல்லி டாட்டா காட்டிவிட்டுப் போகும் வரை.//

அன்பவம் பேசுது போல!
ஐயோ பாவம்!

நாமக்கல் சிபி said...

ஆஹா! சூப்பரா எழுதுறீங்க!

அறம் செய விரும்பு said...

எப்புடி எல்லாம் யோசிச்சு பதிவு போடுறாங்க பாரேன்?!!! சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப நல்லவே இருக்கு ( தாடின்னு நீங்க நினைச்சாலும் தப்பில்ல ....!!!)

தேவன் மாயம் said...

கைவசமுள்ள கீ செயின் ஒன்று அனுப்பி வைக்கவும்!!!ஹி! ஹி!

தேவன் மாயம் said...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். போடுறது மசமொக்கையா இருந்தாலும், பழகுன தோஷத்துக்கு படிக்குற மக்கள், நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.. ஆகா நாம சூப்பரா எழுதுறோம் போலவேன்னு கற்பனை கோட்டை கட்டிக்குவாங்க.///

பதிவு “நல்லா இருக்கு””-ஹி ! ஹி!!

வால்பையன் said...

அட நல்லாயிருக்குங்க!

(நான் உங்களை இளிச்சவாயன்னு சொல்லவேயில்லை தல)

தீப்பெட்டி said...

:))

க.பாலாசி said...

//கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அடுத்தவங்க பொல்லாப்பு நமக்கு எதுக்கு" என்று ஒதுங்கியே இருப்பார்கள்.//

அட ஆமாங்க....பல இடங்கள்ல இதை கவனிச்சிருக்கேன்.

நல்லா சிந்தனை அன்பரே....

மணிஜி said...

ஈ ஈ ஈ ஈ

ஷாகுல் said...

//நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.//

நல்லா இருக்கு என்பது ஒரு வார்த்தை இல்ல இரண்டு வார்த்தை.

அப்புறம் நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க

நையாண்டி நைனா said...

You are a gentle man. hehehehehe

ஹேமா said...

கார்த்திக்,நம்ம மக்களை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க.

Unknown said...

இந்த பத்தில், மூன்று நான்கு கருத்துகளில் இல்லை என்றால் அவர்களை இளிச்சவாயர்கள் இல்லை என்று சொல்லிடலாம்தானே? :-o

புலவன் புலிகேசி said...

கடைசிப் பாயிண்ட்ல கவுத்துட்டீங்களே தல.........

பின்னோக்கி said...

நல்லா இருந்துச்சுன்னு எழுதுனா உங்களையும் இளிச்சவாயன் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கன்றதால..உங்க பதிவு நல்லாயில்லை :-)

Jerry Eshananda said...

கண்டுகொண்டேன்.

ஈரோடு கதிர் said...

நல்லா எழுதியிருக்கீங்க

ஆனா

வெள்ளக்கோட்டுக்கு முன்னாடி நின்னா இளிச்சவாயானா..

Prabhu said...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். போடுறது மசமொக்கையா இருந்தாலும், பழகுன தோஷத்துக்கு படிக்குற மக்கள், நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.. ஆகா நாம சூப்பரா எழுதுறோம் போலவேன்னு கற்பனை கோட்டை கட்டிக்குவாங்க. ( நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)
//////////////////////

அட, இது தேவை தான். நீங்க இப்ப எழுதுன ஆள சொல்லுறீங்களா? இல்ல படிக்கற எங்கள சொல்லுறீங்களா?

RAMYA said...

//
--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காதலியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு கீசெயின் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும் காதலிக்கு வாங்கிய ஏதாவது ஒரு பொருளுக்கு ப்ரீயாக கொடுத்து இருப்பார்கள். "அவ அன்புக்கு முன்னாடி காசெல்லாம் தூசு" என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் அவள் அண்ணா என்று சொல்லி டாட்டா காட்டிவிட்டுப் போகும் வரை.
//

இப்படி கூட செய்வாங்களா பாண்டியன் !

RAMYA said...

//
--> மழை பெய்த ரோட்டில் வண்டியில் போகும்போது, பக்கத்தில் நடப்பவர்கள் மீது தண்ணீர் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் கார்க்காரன் இவர்களின் மீது சாக்கடை நீராபிஷேகம் செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.
//

இப்படி பலமுறை எனக்கும் நடந்திருக்கு:((

RAMYA said...

//
--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்ற கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.
//

அப்படியா! பாவம்பா அவுங்க:((

RAMYA said...

//
--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். போடுறது மசமொக்கையா இருந்தாலும், பழகுன தோஷத்துக்கு படிக்குற மக்கள், நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.. ஆகா நாம சூப்பரா எழுதுறோம் போலவேன்னு கற்பனை கோட்டை கட்டிக்குவாங்க. ( நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)
//

சரி சரி நடகட்டும் நடகட்டும்
இதெல்லாம் போய் சொல்லிக்கிட்டு :))

உக்காந்து யோசிச்சு போட்ட பதிவு
நல்லாவே வந்திருக்கு :))

முரளிகண்ணன் said...

சேம் பிளட்

குமரை நிலாவன் said...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். போடுறது மசமொக்கையா இருந்தாலும், பழகுன தோஷத்துக்கு படிக்குற மக்கள், நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.. ஆகா நாம சூப்பரா எழுதுறோம் போலவேன்னு கற்பனை கோட்டை கட்டிக்குவாங்க.///

பதிவு “நல்லா இருக்கு””-ஹி ! ஹி!!

சிவக்குமரன் said...

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லீங்க, வெளிய போயிருக்காரு!

பாசகி said...

//மழை பெய்த ரோட்டில் வண்டியில் போகும்போது, பக்கத்தில் நடப்பவர்கள் மீது தண்ணீர் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் கார்க்காரன் இவர்களின் மீது சாக்கடை நீராபிஷேகம் செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.//

ஜி இதை மட்டும் தூக்கிட்டீங்கன்னா நான் escape ஆயிடுவேன். பரிசீலனை பண்ணுவீங்களா? :)

பீர் | Peer said...

அப்போ நாமல்லாம் ரொம்ப நல்லவங்ஞலா.. அவ்வ்வ்....

ப்ரியமுடன் வசந்த் said...

//ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.//

க க போ..

செம்ம தல ரொம்ப நாள் கழிச்சு ஃபார்முக்கு வந்துட்டீங்க...

ஆ.ஞானசேகரன் said...

//இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. அதனால யாரும் "நீயும் இளிச்சவாயன்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..//

இல்லயே! அப்படியொன்றும் இதில் உண்மை இருப்பதாக புரியலயே நண்பா>>.

Anbu said...

:-)))))))))))))))

Karthik said...

ஆவ்வ்.. சில பாய்ண்டுகள் ஒத்துப் போறதே! :P :P

Karthik said...

@அன்பு

இந்த பதிவில் எப்படி இவ்வளவு தைரியமா இவ்வளவு பெரிசா சிரிக்கிறீங்க? :)

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர்.. :))

cheena (சீனா) said...

நாம பாத்ததுலே - ந்ம்மள்ளே - யார அடையாளம் கண்டு பிடிச்சி இனா வானான்னு பட்டம் கொடுத்தீங்க

"உழவன்" "Uzhavan" said...

இந்த பத்து குணாதிசயங்களும் அந்த ஒரே ஆளிடமே இருக்குமா தல? :-)

பாலகுமார் said...

அண்னே, நீங்க ரொம்ப நல்லவர்ண்னே !

ILA (a) இளா said...

அருமையான பதிவுங்க. (நம்புவீங்க தானே?)