October 9, 2009
குழந்தைகளின் உலகில்..!!!
ஏழுமலையும் ஏழுகடலும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத்தீவில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது
ராட்சஷனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை..
ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து
உடைக்க யத்தனித்தபோது..
எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு
அம்மா காணாமல் போக..
அசதியில் தூங்கி போகிறது குழந்தை..!!
இருந்தும் -
எப்போது கதை மீண்டும் தொடங்கப்படுகிறதோ
அப்போது தான் கொல்லப்படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!
***************
திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த
புள்ளிகளை இணைத்து
கர்ம சிரத்தையாய் படமொன்றை
வரைந்து கொண்டிருந்தது குழந்தை..
"பாப்பா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.."
தந்தையின் குரல் கேட்டவுடன்
பெருமிதம் கொண்டவளாய் ஓடி வந்து
ஆசையுடன் காகிதத்தை நீட்டினாள்..
வெள்ளை நிறக் கிளியொன்று
சிறகுகள் முற்றுப்பெறாமல்
பறக்க முடியாத நிலையில்
காகிதத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது..
"கிளி ரொம்ப அழகா இருக்குடா தங்கம்.."
அவன் சொல்ல
பிள்ளையின் முகம்
வாடிப் போனது..
"ஐயோ.. அப்பா.. அது கிளி இல்லை.. புறா.."
மீண்டும் அவன் சொன்னான்..
"இல்லம்மா.. இது கிளிதான்.."
கோபம் கொண்டவளாய்
வெடுக்கென காகிதத்தைப்
பறித்துக் கொண்டு சொன்னாள்..
"நான் வரையுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
Not Nice one.
Nice Two. hhihihi...
//குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!//
கலக்கல் நண்பா.
/குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!/
ஆகா!
"நான் வரையுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!
கண்டிப்பாக!
அசத்துறீங்க!
இரண்டுமே அருமை தோழா
வித்தியாசமான கவிதை கார்த்திகை பாண்டியன்.போகோ சேனல் ரொம்ப பாக்காதீங்கனு நான்
அப்பவே சொன்னேன்.
இரண்டாவது கவிதை பிடித்திருக்கிறது.முதல் கவிதை கொஞ்சம் புரியவில்லை அல்லது நான் அதை
கிளி என்று சொல்ல விரும்ப வில்லை.காரணம் நீங்கள் அதை புறா என்று மறுக்க வாய்ப்பிருக்கிறது.
"நான் எழுதுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!! ( அப்படின்னு சொல்லுவீங்களா மாட்டீங்களா ?? )
குழந்தைகளின் உலகைப்போலவே அழகான கவிதைகள்
அழகு! அருமை!
Awesome...both of them.
Na, kalakkureenga..:)
ஒரு மாபெரும் கவிஞர் உங்கள் உள்மன ஆழங்களில் தூங்கிக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது.
//"நான் எழுதுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!//
இதுதான் உண்மை.
கார்த்தி,மேலேயுள்ள வரிகளில் ஏதோ ஒன்று அடக்கம்.உங்களுக்கு மட்டுமே புரியும்.
கார்த்தி.. அருமை.உங்களின் குழந்தைத்தனம் தெரிகிறது :-)
//அப்போது தான் கொல்லப்படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!//
குழந்தையின் மனதொத்த வரிகள்...
//"நான் வரையுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!//
என்னுடைய அக்கா பொண்ணு ஒரு தடவ இதே மாதிரிதான் சொன்னாள். எனது நியாயத்தை தெளிவுபடுத்த விரும்பாதவனாய் லேசாக தலையசைத்தேன்.
//தேவன் மாயம் said...
ஒரு மாபெரும் கவிஞர் உங்கள் உள்மன ஆழங்களில் தூங்கிக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது.//
அது தூங்கிகிட்ட இருகட்டும், யாருப்பா எழுப்பி விட்டது!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
முதல் கவிதை சரியாக புரியவில்லை..
இரண்டாவது நல்லாருக்குங்க..
//குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!//
அற்புதம் கார்த்தி.... உங்களது குழந்தை மனம் தெரியுது...
//வெள்ளை நிறக் கிளியொன்று
சிறகுகள் முற்றுப்பெறாமல்
பறக்க முடியாத நிலையில்
காகிதத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது..//
நீங்களும் கிளின்னு சொன்னா, பாப்பாக்கு உங்க மேலயும் கோவம் வரப்போகுது, புறான்னு தான் ஒத்துக்கோங்களேன். :)
அடடா.........கலக்கல்ஸ்!
ஆஹஹா... அழகான கவிதை! :)
இந்த கவுஜை போலே இங்கேயும் இருக்கு கவுஜை.
இப்பல்லாம், முதலில் எதிர்கவிதை கண்ணில் பட்டுவிடுகிறது..
CC நைனா. ;)
கொஞ்ச கால பதிவுகளிலேயே உங்களதில பெஸ்ட் இதுதான்!
அவர்கள் உலகின் அற்புதங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
மிக அருமை தோழா.....
அருமை.. :))
முதல் கவிதை ...... கடைசி வரிகள், கலக்கிட்டீங்க .
முதல் கவிதை சூப்பர்.
//"நான் வரையுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!//
நச்......
பாராட்டுகள் நண்பா
ஒரிஜினல் , நையாண்டி ரெண்டும் சூப்பர்
அருமையான கவிதைகள்! குழந்தைகள் மனம் போன்றே!
குழந்தைகள் மனநிலையை உணர்த்தும் அருமையான கவிதைகள்.
ரெண்டாவது கவிதை அருமை நண்பா.........என்ன திடீர்னு குழந்தைகளை பற்றிய கவிதை????????????
உண்மை என்வென்றால் உங்கள் மனதிற்குள் இருக்கும் குழந்தை இந்த கவிதைகளில் புகுந்து விளையாடி இருக்கிறான். இரண்டு கவிதைகளிலும் கடைசி வரிகள் தான் நச்சு.......
ஆனால் குழந்தைகள் இதை விட அதிகமாக தான் யோசிப்பார்கள்
Nice One..
இரண்டாவது கவிதை மிகச் சிறப்பு.குழந்தை காகிதத்தை பறித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் வேறு மாதிரி யோசித்துப் பாருங்கள். கவிதை இன்னும் சிறப்பாக மலரக் கூடும் என நினைக்கிறேன்.
அடேங்கப்பா! மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல மட்டும் பெருமைப்பட்டுக்கவேணாம். கவிஞன்னு சொல்லியும் பெருமைப்பட்டுக்குங்க. முந்தைய கவிதை முயற்சிகளை ஒப்பிடும்போது செம முன்னேற்றம்.மகிழ்ச்சியோடு பாராட்டுக்கள்.
இரண்டு கவிதைகளுமே பிரமாதம்.
nice sir..
i dedicate this to my sweet dad...
thanks...
the first one is great..
i have added the same to the படித்தது / பிடித்தது series in my site
http://www.writercsk.com/2009/10/79.html
Post a Comment