"ஹலோ.."
"......"
"ஹலோ.."
"சொல்லுப்பா.."
"என்னம்மா.. தூக்கமா.."
"இல்லடா.. சொல்லு.."
"என்னம்மா.. என்ன ஆச்சு.. ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?"
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சொல்லுப்பா.."
"அம்மாடி.. என்னம்மா.. அழுதியா?"
"....."
"என்னன்னு கேக்குறேன்ல.. அழுதியா?"
"ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.."
"அம்மா.. அம்மா.. அழாதடி.. என்னமா.. ஏன் அழுகுற.. வேணாம்டிமா.."
"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. நான் எங்கப்பாகிட்ட போறேன்.. என்ன விட்டுருங்க.. எனக்கு யாரும் வேண்டாம்.."
"அம்மா.. கோபத்துல அர்த்தங்கெட்டதனமா பேசாத.. என்னடி ஆச்சு..?"
"ம்.ம்.ம்.ம்ம்.. போன வாரம் என்னை வந்து பொண்ணு பார்த்துட்டு போனாங்க இல்ல?"
"ஆமாம்.. அதுக்கு?"
"அந்தப் பையனுக்கு என்னைப் பிடிக்கலையாம்.."
"சரி விடுடி..அவனுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு விடுவியா.. இதுக்குப் போய் அழுதுக்கிட்டு.."
"உனக்கு என்னடா.. இதெல்லாம் உனக்குப் புரியப் போறதே இல்ல.. அவன் என்னைப் பார்க்க வந்த மூணாவது பையன்.. பார்க்க குட்டையா ஒல்லியா இருந்தான்.. அவனுக்கே எண்ணப் பிடிக்கலேன்னா..? நான் என்ன அத்தனை அழகில்லாமலா இருக்கேன்? எனக்கு வேண்டாம்.. என்ன விட்டுருங்க.. நான் செத்துப் போறேன்.. எங்கப்பாகிட்ட போகணும்.."
"சும்மா லூசு மாதிரி பேசாதடி.. ஒரு பையனுக்கு உன்னைப் பிடிக்கலேன்னா அவ்ளோதானா? வாழ்க்கைனா என்ன உனக்கு விளையாட்டா இருக்கா? உங்க அப்பா மட்டும் உசிரோட இருந்தா நீ பேசுறதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிச்சு இருப்பார்..பார்த்துக்கலாம்டிமா.. ரிலாக்ஸ்டி.."
"........."
"சாகறதுன்னா ஒரு நிமிஷம் போதும்டி.. ஆனா நீ விட்டுட்டுப் போன வலி எங்களை எத்தனை பாதிக்கும்னு யோசிச்சியா? நான் எல்லாம் உனக்கு என்னன்னு இருக்கிறேன்? இல்லை கேக்குறேன்.. ரெண்டு வாரம் முன்னாடி வண்டில போறப்ப பஸ்ல போய் அடிபட்டு விழுந்து கிடந்தைல.. உடனே யாருக்கு போன் பண்ணுன?.."
"....."
"யாருக்குடி பண்ணுன..."
"உனக்குத்தான்.."
"ஏன்.. உங்க அம்மா இருக்காங்க.. அக்கா? அவங்களுக்கு எல்லாம் போன் பண்ணாம ஏன் எங்கயோ தூரத்துல இருக்குற எனக்கு பண்ணின?"
"....."
"பதில் சொல்ல முடியலைல... அதுதாண்டி நான் உனக்கு.. உங்க அப்பா திடீர்னு இறந்து போனப்ப சாமிக்கு என்ன பண்ணன்னு தெரியாம என்னை அனுப்பிச்சாரு.. கடைசி வரைக்கும் இந்தப் பிள்ளைய நல்லா பார்த்துக்கப்பான்னு.. புரிஞ்சுதா? இது ஏதோ உனக்குத் தெரியாத மாதிரி.. நான் இருக்குறப்ப, நீ செத்துருவியா? உன்னை அப்படி விட்டா அப்புறம் நான் என்னடி மனுசன்? ம்.ம்.."
"அம்மா.. டேய்.. நீ ஏன்டா அழற?"
"அப்புறம் நீ பேசுறதைக் கேட்டு உன்னை என்ன மடில போட்டுக் கொஞ்சவா முடியும்? என்னை நானே நொந்துக்க வேண்டியதுதா.."
"சரிம்மா... சாரிப்பா.. தெரியாம சொல்லிட்டேண்டா.. நீ இருக்குறப்பா நான் ஏன்டா கவலைப்படணும்?"
"இப்ப இருக்குற புத்தி பேசுறப்ப எங்க போச்சாம்? சுட்டுத் தின்னுட்டியா?"
"ஐயா சாமி.. தெரியாம பேசிட்டேன்..மன்னிச்சுடுங்க.."
"அறிவு கேட்ட முண்டம்.. எரும மாடு.. நாயே.."
"தாங்க்ஸ்.. அப்புறம்..?"
"திட்டினா தாங்க்ஸ் சொல்வியா?"
"தாங்க்ஸ் திட்டினதுக்காக இல்ல.."
"பின்ன..?"
"எனக்கு எதுன்னாலும் கவலைப்பட ஒருத்தன் இருக்கியே.. எங்க அப்பா ஸ்தானத்துல.. அதுக்கு.."
"இருப்பேன்டி அம்மு.. சாகுறவரைக்கும்.. Friends for life"
"தாங்க்ஸ்டா.."
"அப்பாடா.. இப்போதான் பிள்ளை சிரிக்கிறா.. இப்போ எவ்வளவு நல்லா இருக்கு?"
"நான் இங்கே ஈரோட்டுல சிரிக்கிறது உனக்கு சென்னைல தெரியுதாக்கும்?"
"அதெல்லாம் பீலிங்க்ஸ் dog.. கண்டிப்பா கண்ணை மூடி பார்த்தா நீ தெரியுரம்மா.."
"எப்பவும் இப்படியே இருக்கணும்டா.."
"கண்டிப்பா.. நீ சிரிச்சிக்கிட்டே இரும்மா.. சந்தோஷமா.. ஒழுங்காத் தூங்குவியா.. நான் நிம்மதியா இருக்கலாமா?"
"சரிம்மா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீயும் நிம்மதியா தூங்குடா.."
"thats my girl..good night..take care.."
"bye da.. good night.."

25 comments:
சிலிர்க்குதுங்க. இப்புடி இருக்கணும். இருக்காங்க.
நல்லா இருக்கு கார்த்தீ..
ஆனா இந்த ஈரோடு - சென்னை போன்ற வார்தை கொஞ்சம் இடிக்குது..
என்ன விஷயம்..:))
என்னங்க இது? பையன் ஈரோட்டுல இருக்குறதும், சென்னை பொண்ணுக்கிட்ட பேசுறதும்... சம்திங் ராங்! ராங்கில்லனாலும் நாங்க ராங்காதான் பேசுவோம்! :-)
raittu.
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்திக் இந்த உரையாடல்.
ரியாலிட்டிக்கு வெகு அருகில்.இது போன்ற உரையாடல் நம்மில் பலரிடையே நடந்திருக்கும்.
முழு வெற்றி உங்களுக்கு !!! Hats off !!
என்னை வச்சி காமெடி
ஏதும் பண்ணலியே?
உரையாடல் நல்லாயிருக்கே.. கிராஸ் டாக் கேட்டது மாதிரி இருக்கு.. எல்லோரையும் போல ஊருதான் உதைக்குது...
எனக்கு புரிந்துவிட்டது.
எப்படி தெரிஞ்சது இந்த கத?
என்னாதிது?
very nice
கலக்கல்ஸ் ரியலி..:))
//pappu said...
என்னங்க இது? பையன் ஈரோட்டுல இருக்குறதும், சென்னை பொண்ணுக்கிட்ட பேசுறதும்... சம்திங் ராங்! ராங்கில்லனாலும் நாங்க ராங்காதான் பேசுவோம்! :-)
LOL. :)))
முழுக்க உரையாடல்.அருமை.
புரிதலுக்கான தேடல் வார்த்தைகளில் தான் இருக்கிறது.வார்த்தைகளுக்கான தேடல்? அற்புதம் கா.பா.
ஏதோ புரியுற மாதிரி இருக்கு..
//சொல்லரசன் said...
எனக்கு புரிந்துவிட்டது.//
எனக்கு எப்பவோ புரிஞ்சிட்டுது.
அவங்களோட நட்பைச் சொன்னேன்.
உண்மையான நட்பை பற்றி சொன்னதற்கு நன்றி பாண்டியன்.
ஈரோடு? யாரோடு?
நைஸ் கார்த்திக்...
(ஸ்டார்டிங்கல சேரன் படம் பார்க்கிற ஃபீலிங்..)
உரையாடல் யதார்த்தமா இருக்கு.
யாரோ ரெண்டு பேரு பேசிகிட்டு இருக்கிறதைப் கேட்டது போல இருந்தது படிக்கும்போது!
நல்லா சரளமா எழுதி இருக்கீங்க.
அன்பின் தேடலை அருமையா சொல்லப்பட்டுள்ளது!
எனக்கு ஒன்னும் புரியலைங்க..
:-(
//.. pappu said...
என்னங்க இது? பையன் ஈரோட்டுல இருக்குறதும், சென்னை பொண்ணுக்கிட்ட பேசுறதும் ..//
பையன் சென்னை, பொண்ணு ஈரோடுனு நினைக்கிறேன்..
எனக்கும் புரிஞ்சிட்டுது.
அவங்களோட நட்பைச் சொன்னேன்
//ஆனா இந்த ஈரோடு - சென்னை போன்ற வார்தை கொஞ்சம் இடிக்குது..
என்ன விஷயம்..:))//
பதில் சொல்லுங்க புரொபசர்
ஒவ்வொரு மனுசனுக்கும், ஒவ்வொரு ஃபீலிங்.... :)
Reality Conversation
LIKED IT
நிதர்சனகளை வார்த்தைகளில் வார்ப்பது எளிதல்ல ...........உங்களுக்கு அது சுலபத்தில் கைகொள்கிறது ...........தொடருங்கள் நானும் உங்கள் எழுத்தை தொடர்கிறேன்
Post a Comment