தமிழில் இத்தகைய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கத் துணிந்தமைக்காக இயக்குனர் ஜனநாதனுக்கு பாராட்டுக்கள். காதலையும் கடலையும் மையப்படுத்தி இயற்கை, மேலை நாடுகள் வளரும் நாடுகளின் மக்களை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் அவலத்தை படம்பிடித்துக் காட்டிய ஈ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் ஜனநாதனின் மூன்றாவது வித்தியாசமான படம் - பேராண்மை. உண்மையைச் சொல்வதானால் இது ஒரு ஹை-டெக் விஜயகாந்த் படம் (நன்றி - ராஜு). ஆனால் சொன்ன விதத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த காட்டிலாகா அதிகாரி "ஜெயம்" ரவி. அவரிடம் பயிற்சிக்காக வரும் என்.சி.சி மாணவிகளில் ஐந்து பேருக்கு மட்டும் அவரை பிடிக்காமல் போகிறது. அந்தப் பெண்களோடு காட்டுக்குள் ட்ரெக்கிங் போகும் இடத்தில் இந்திய ராக்கெட்டை நாசம் செய்ய வரும் அந்நிய சக்திகள் பற்றித் தெரிந்து கொள்கிறார் ரவி. எப்படி அந்த சதியை பெண்களின் உதவியோடு ரவி முறியடிக்கிறார், அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார் - இதுதான் பேராண்மை.
உடம்பை இரும்பாக்கி இருக்கிறார் "ஜெயம்" ரவி. சண்டைக் காட்சிகளில் பயங்கர ரிஸ்க் எடுத்திருக்கிறார். சமீப காலங்களில் ஒரு தமிழ் சினிமா ஹீரோ கோவணத்துடன் நடித்திருப்பது இந்தப் படமாகத்தான் இருக்கும். பயிற்சிக்கு வரும் பெண்களால் அசிங்கப்படும் போதும், மேலதிகாரி கேவலப்படுத்தும்போதும் தானும் கலங்கி நம்மையும் கலங்க வைக்கிறார். ஐந்து கதாநாயகிகள். நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அஜிதாவாக வரும் பெண் செம க்யூட். புதைகுழியில் மாட்டி செத்துப் போகும்போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ஆரம்ப காட்சிகளில் நாயகிகளின் சேட்டை நம்மை எரிச்சல் கொள்ளச் செய்தாலும் போகப்போக மனம் மாறி நாட்டுக்காக போராடும் காட்சிகளில் கலக்குகிறார்கள்.
மேலதிகாரியாக பொன்வண்ணன். கீழ்சாதிக்காரன் என்று ரவியை அவமானப்படுத்துவதும், பழங்குடி இனத்தவரை அடித்து நொறுக்கும்போதும் பார்ப்பவர்களை வெறிகொள்ளச் செய்கிறார். அந்நிய சக்திகளை போராடி வீழ்த்துவது ரவியாக இருந்தாலும், கடைசியில் ஜனாதிபதி விருதை பொன்வண்ணன் வாங்குவது நம் நாட்டில் நிலவும் குரூரமான நிலையைக் காட்டுகிறது. வார்டனாக வரும் வடிவேலுவும், ஊர்வசியும் வெட்டியாக வந்து போகிறார்கள். வெளிநாட்டு வில்லன் ரோலந்த் கின்கின்கர் எருமைக்கடா போல இருக்கிறார். ரவியோடு சண்டை போட்டு செத்துப் போகிறார்.
வைரமுத்துவின் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பது வித்யாசாகர். தேவைப்படும் இடங்களில் மட்டும் பாடல்கள் பயன்படுத்தப் பட்டிருப்பது புத்திசாலித்தனம். ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் கலக்கி இருக்கிறார். ரவியோடு சேர்ந்து கேமராவும் மரம் ஏறுகிறது, அருவிகளில் விழுகிறது. அட்டகாசமான ஆங்கிள்களில் படம்பிடித்து இருக்கிறார்கள். வி.டி.விஜயன் படத்தின் முதல் பாதியின் நீளத்தை மட்டும் கொஞ்சம் எடிட்டியிருக்கலாம். சண்டைக்காட்சிகளும் தரம்.
அரசியல் பற்றிய தன்னுடைய சமுதாயக் கருத்துகளை பயப்படாமல் சொல்லி இருக்கிறார் ஜனநாதன். விவசாயம் பற்றியும்,வெளிநாடுகள் இந்தியாவில் மார்க்கெட்டாகப் பயன்படுத்துவது பற்றியும் ஆதங்கப்படுகிறார். வசனங்களில் தீப்பொறி பறக்கிறது. படத்துக்கான பல விஷயங்களை சிரமப்பட்டு சேகரித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் உழைப்புத் தெரிகிறது. படத்தில் சில குறைகள் இல்லாமலும் இல்லை. முதல் பாதியில் பெண்கள் நடந்து கொள்ளும் விதம், வசனங்களில் இருக்கும் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றைக் குறைத்து இருக்கலாம்.
அதே போல நம்முடைய சென்சாரும் பைத்தியக்காரத்தனமாக பல வசனங்களை வெட்டியிருப்பது அசிங்கம். ஆபாசக் காட்சிகள் கொண்ட
படத்துக்கெல்லாம் "யு" சர்டிபிகேட் கொடுத்து விட்டு ஜாதியைப் பற்றிய நாட்டில் நிலவும் உண்மையான நிலையை சொல்லும் விஷயங்களைக் கட செய்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட முயற்சிக்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
படத்துக்கெல்லாம் "யு" சர்டிபிகேட் கொடுத்து விட்டு ஜாதியைப் பற்றிய நாட்டில் நிலவும் உண்மையான நிலையை சொல்லும் விஷயங்களைக் கட செய்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட முயற்சிக்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
பேராண்மை - பெருமை
16 comments:
சுடச்சுட ...
மெல்ல பார்க்கணும்.
அப்ப பார்க்கலாம்ங்கிறீங்க. நன்றியும் தீபாவளி வாழ்த்துகளும்.
காபா சொல்லியாச்சில்ல - பாத்துடுவோமல
நல்வாழ்த்துகள்
neenga sonna oru book kuda ithu related ah irunthuchu la.... vimarsanam arumai
படம் நல்ல இருக்கும்போல தெரிகிறது. விமர்சனத்திற்கு நன்றி
vimarsanam arumai :)
தீபாவளி வாழ்த்துக்கள்.
நடுநிலையான விமர்சனம்.
நைஸ்
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா
தீபாவளி வாழ்த்துக்கள்
நண்பரே!
எதிர்பார்ப்புகளுக்கு
ஈடு செய்வது போல்
இருக்கும் என நிச்சயமாக
நம்பிய படம் பேராண்மை!
தங்களது விமர்சனமும்
அதைத்தான் சொல்கிறது!
நன்றி!
கர்நாடகத்துக்கு வந்தபின்
என் கருத்தைச் சொல்கிறேன்!
//இப்படிப்பட்ட முயற்சிக்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.//
பார்க்கலாம் என்று சொல்லுகின்றீர்களா! முயற்சிகின்றேன் நண்பா..
இடுகையில் பத்தியின் இடைவெளி அதிகமாக இருக்கு நண்பா சரிசெய்யுங்கள் படிக்க நன்றாக இருக்கும்...
பாக்க வேனும்போல் இருக்கு
சென்சாருன்னு ஒன்னு இருக்கவே கூடாது படத்தக்கு ரேட்டிங் வச்சிடனும்.... ஓகேவா...
நல்ல விமர்சனம்... படத்த கண்டிப்பா பார்க்கணும்
நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்!
Post a Comment