தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு. இடம்: ஏ.கே.அகமத் ஜவுளிக்கடை, மதுரை. போத்திஸ், லலிதா எல்லாம் வந்து விட்டதால் இந்த முறை அகமதில் அவ்வளவாக கூட்டம் இருக்காது என்று சொன்னவர்கள் முகத்தில் கரி. என் அப்பாவுக்கு வேட்டி, சட்டை வாங்கி விட்டு பணம் கட்டுவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு கிராமத்து தம்பதி. அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தைகள்..
கணவன்: உன்னைய நான் என்ன சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்? உனக்கும் பிள்ளைங்களுக்கும் துணி எடுத்தாப் போதும்னு தானே? இப்போ நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
மனைவி: ஏன்? நான் என்ன தப்பு பண்ணிட்டேனாம்?
கணவன்: விளையாடாத புள்ள.. எனக்கு ரெண்டு வேட்டி, நாலு கைலி.. இதெல்லாம் அவசியமா? இந்தக் காசுக்கு குழந்தைக்கு இன்னும் நல்லதா துணி வாங்கி இருக்கலாம்..
மனைவி: தே.. சும்மாக் கிட..கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா மில்லுக்கு ஒரே கைலிய கட்டிட்டு போய்க்கிட்டு இருக்க.. நாலு இடம் போற வர மனுஷன்.. உனக்கு நாலு துணி வாங்கினா ஒண்ணும் தப்பு கிடையாது.. வா..
அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். ஒருவர் மற்றொருவருக்காக கவலைப்படும் நல்ல உள்ளங்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.
***************
தீபாவளி அன்று "தினசரி வாழ்க்கை" mayvee காசி விஸ்வநாத் போன் செய்து வாழ்த்துகள் கூறினார். ஆனால் மனிதர் கடைசியில் செய்த அட்வைஸ் தான் என்னை மண்டை காயச் செய்தது. "பட்டாசுகளை எல்லாம் பத்திரமா வெடிங்க.. அது உங்க சேப்டிக்கு. தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு.." அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஏன்யா எம்மேல இந்தக் கொலைவெறி?
***************
நேற்றைக்கு முன்தினம் நண்பர் ஸ்ரீதரோடு டவுன் ஹால் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தேன். நடுத்தர வயதுடைய, ஒரு கால் இல்லாத மனிதரொருவர் நடைபாதையின் ஓரத்தில் நின்றபடி தர்மம் கேட்டுக் கொண்டிருந்தார். பார்க்கப் பாவமாக இருக்கவே இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு வந்தேன். அப்போது அந்தப் பக்கமாக போய்க்கொண்டிருந்த இன்னொரு மனிதர் என்னருகே வந்து என்னைக் கடிந்து கொண்டார். "இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தர்மம் பண்ணாதீங்க சார். அந்த ஆளுக்கு நாலு புள்ளைங்க. எல்லாமே பிச்சை எடுக்குதுங்க. கிடைக்குற காசை வச்சு தண்ணி அடிக்கிறதும், வரிசையாப் பிள்ளையப் பெத்துக்குறதும் மட்டும்தான் இவங்களுக்குத் தெரியும்..."சொல்லி விட்டுப் போய் விட்டார். நான் திரும்பி ஸ்ரீதரைப் பார்த்தேன். அவர் ஒரே ஒரு வாசகம்தான் சொன்னார்.."ஜெயகாந்தனோட ஒரு கதைல படிச்சு இருக்கேன். இந்த மாதிரி விளிம்பு நிலை மனிதர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே பொழுதுபோக்கு அதுதானே.. அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?" எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடக்கத் தொடங்கினேன்.
***************
சன் டிவி தன்னுடைய அடுத்த படமான "கண்டேன் காதலை" படத்தோட புரமொஷனை ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ "வேட்டைக்காரன்"?. அது பொங்கலுக்குத்தான் வரும்னு நினைக்கிறேன். போட்டிக்கு அசலும் வந்தா களைகட்டும். பார்க்கலாம். தீபாவளிக்கு வந்த படங்கள்ல பேராண்மை தான் முதலிடம். ஆதவனைப் பார்த்த பதிவுலக மக்கள் எல்லோருமே செம பிளேட் என்கிற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால் எனக்கு என்னமோ அப்படித் தோணல. பழைய படங்களோட உல்டா, கிளைமாக்ஸ் கொடுமை அத்தனையும் தாண்டி படம் பி, சி செண்டர்ல எல்லாம் பட்டையக் கிளப்பும்னு நினைக்கிறேன். அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
***************
இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் - புலிப்பானி ஜோதிடர். சந்தியா பதிப்பக வெளியீடு. "காலபைரவன்" என்னும் புனைப்பெயரில் எழுதி வரும் விஜயகுமார் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றறிந்தபோது உள்ளூர ஒரு சந்தோஷம். வித்தியாசமான கதைக்களங்கள். எல்லாக் கதைகளுமே நன்றாக இருந்தபோதும் "வனம்" என்னும் கதை என்னை மிகவும் பாதித்தது. பள்ளிக்கூட மாணவர்களை வெறும் இயந்திரங்களாகப் பார்க்காமல் இயற்கையைக் கற்றுத்தர முயலும் ஒரு ஆசிரியர் எவ்வாறு காயப்படுகிறார் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் நண்பர் காலபைரவன். படிக்க வேண்டிய புத்தகம்.
***************
பதிவுலக நண்பர் பொன்.வாசுதேவனின் "அகநாழிகை" என்னும் கலை இலக்கிய சிற்றிதழ் வெளியாகி உள்ளது. அவருக்கு வாழ்த்துகள். கதை, கவிதை, கட்டுரை, உலக சினிமா, தமிழ் சினிமா, அரசியல், குறும்படம் என சகல தளங்களையும் தொட்டுச் செல்கின்றது புத்தகம். அருமையான வடிவமைப்பு. பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் நம் சக பதிவர்களின் படைப்புகளையும் பார்க்க நேரிடும்போது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. புத்தகத்தில் நம்முடைய படைப்பும் இடம்பெற நாமும் நன்றாக எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது.
இதழில் வெளியாகி இருக்கும் கதைகளில் பாவண்ணனின் "பூனைக்குட்டி" என்னும் கதையும், எஸ்.செந்தில்குமாரின் "பாலை நிலக் காதல்" என்னும் கதையும் மனதை நெகிழச் செய்தன. கவிதைகளில் தமிழ்நதி, ந.லக்ஷ்மி சாகம்பரி, அய்யனார், விதோஷ், என்.விநாயக முருகன், லீனா மணிமேகலை, மண்குதிரை, சேரல், கே.ஸ்டாலின் ஆகியோரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றன. குறிப்பாக என்.விநாயக முருகனின் இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்தது.
பெருநகரில் தொலைந்து போன
பறவையொன்றை
நான்கு வயது மகளுக்கு
விளக்க வேண்டியிருந்தது
புத்தகத்தில் பறக்கும்
காட்டுப்பறவையை
விவரித்தேன்
குரல் பதியப்பட்ட
ஒலிநாடா ஓடவிட்டேன்
இந்த ஸ்பரிசம் போலவென்று
கூண்டுக்கிளியை
தொட்டுக் காட்டினேன்
மூன்றையும் ஒன்று சேர்த்துக் காட்ட
முடிந்ததேயில்லை..
அகநாழிகைக்கும், வாசுவுக்கும் மீண்டும் என் வாழ்த்துகள்..!!!!

44 comments:
//அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். ஒருவர் மற்றொருவருக்காக கவலைப்படும் நல்ல உள்ளங்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.//
ஆமாம் இது நிஜமான வார்த்தைகள்..
இது யோசித்ததாகத் தெரியவில்லை. மனிதர்களின் பல்வேறு முகங்கள். அழகாய். நன்றி
நல்ல பகிர்வு..அனைத்து விஷயங்களும் அருமை..
அற்புதமான இடுகை நண்பா..
அந்த கிராமத்து பாசத்தை அப்படியே கண் முன் நிறுத்திவிட்டீர்கள்
சரியான தருணத்தில் ஸ்ரீ சொன்ன வாசகம்... அருமை
பிச்சை எடுத்து குடிக்கிறவனுக்கு பிச்சை போட்டால் தப்பு, லஞ்சம் வாங்கி குடிப்பவனுக்கு தொடர்ந்து லஞ்சம் கொடுக்கத்தானே செய்கிறோம்
//நாலு இடம் போற வர மனுஷன்.. உனக்கு நாலு துணி வாங்கினா ஒண்ணும் தப்பு கிடையாது.. வா..//
பல நன்மனைவிகள் இம்மாதிரி உள்ளன்போடு இருப்பது போற்றப்படவேண்டிய விசயம்.
//அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?" எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடக்கத் தொடங்கினேன்.//
சரிதான்..
//தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க//
அப்படிங்களா? நீங்க இலக்கியவாதியா....சொல்லவேயில்ல...
//புலிப்பானி ஜோதிடர். சந்தியா பதிப்பக வெளியீடு. "காலபைரவன்" என்னும் புனைப்பெயரில் எழுதி வரும் விஜயகுமார் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்//
தேவையான தகவல் பகிர்வு...நன்றி...
//பதிவுலக நண்பர் பொன்.வாசுதேவனின் "அகநாழிகை" என்னும் கலை இலக்கிய சிற்றிதழ் வெளியாகி உள்ளது.//
அவருக்கு எனது வாழ்த்துக்களையும வணக்கங்களையும் பகிர்கிறேன்.
இறுதி கவிதை நன்றாக உள்ளது.
உட்கார்ந்து யோசித்தாலும் உருப்படியாத்தான் இருக்கிறது.
கார்த்தி,இவற்றுள் அது இது என்று பிரித்துச் சொல்ல முடியவில்லை.
அத்தனயுமே சிந்திக்க வேண்டியவை.கவிதை அருமை.
சென்ஸிடிவ்வா எழுதுறீங்க!
முதலாவதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. இதுதான் நமது கலாச்சாரத்தின் சாரம்.
மிக அருமையான பகிர்வு. ஒவ்வொன்றும் முத்துக்கள்.
ரொம்ப நல்லா யோசிக்குறீங்க பாஸ்..
ஆனா,
//அந்த ஆளுக்கு நாலு புள்ளைங்க. எல்லாமே பிச்சை எடுக்குதுங்க//
குழந்தைங்க பிச்சை எடுக்குறதயோ/ எடுக்க விடுறதயோ ஊக்கப்படுத்த கூடதுங்குறது என்னோட எண்ணம்..
அருமையான பதிவு... நல்ல தொகுப்பு...
//தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு. இடம்: ஏ.கே.அகமத் ஜவுளிக்கடை, மதுரை. போத்திஸ், லலிதா எல்லாம் வந்து விட்டதால் இந்த முறை அகமதில் அவ்வளவாக கூட்டம் இருக்காது என்று சொன்னவர்கள் முகத்தில் கரி//
itha than naanga ethir pathom
//தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு. இடம்: ஏ.கே.அகமத் ஜவுளிக்கடை, மதுரை. போத்திஸ், லலிதா எல்லாம் வந்து விட்டதால் இந்த முறை அகமதில் அவ்வளவாக கூட்டம் இருக்காது என்று சொன்னவர்கள் முகத்தில் கரி//
இத தான் நாங்க எதிர் பாத்தோம் -
ஏ.கே.அகமத் மேட்டர் ரசித்தேன் தல.
//பட்டாசுகளை எல்லாம் பத்திரமா வெடிங்க.. அது உங்க சேப்டிக்கு. தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு//
விஸ்வநாத் அவர்கள் உங்களை வச்சி வெடி வெடிச்சி தீபாவளி கொண்டாடிவிட்டார் :-)
இந்த பூனைக்குட்டிக் கதை எனக்கென்னவோ வழவழன்னு இழுப்பதுபோல் இருந்தது. ஒருவேளை எனக்கு வாசிப்பனுபவம் இல்லாததாலோ என்னவோ.
வண்டி பர்ஸ்ட் கியர்ல பறக்குது போல.
சூப்பர் கார்த்திக்.
நல்லாவே யோசிச்சிருக்கீங்க புரொபசர்
அன்பின் காபா
அருமை அருமை - அகமதின் கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் - அவர்களின் மனம் - இயல்பு - மனித இயல்பு
இலக்கியம் பேசினீர்களா என்ன
ஜெயகாந்தன் கூறிய்தும் சரிதான்
கடைச்க் கவிதை அருமை
நல்வாழ்த்துகள் காபா
பதிவின் முதல் பகுதி நெகிழ்வு கா.பா....மேலும் தீபாவளிக்கு என்னையும் மதித்து முதல் ஆளாக அழைத்து
தீபாவளி வாழ்த்துகள் சொல்லி நெகிழ வைத்து விட்டீர்கள் !!!
வளர்க !!! தொடர்க !!!
முதல் விடயம். நான் வயல் வெளிகளிலும், கிராமப் புறங்களிலும் பார்த்து இலயித்த அந்த பழைய, பண்பட்ட மக்களை நினைவு படுத்துகிறது.
//இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.//
உண்மைதான்.அனைத்து பகிர்வும் அருமை
//
அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். ஒருவர் மற்றொருவருக்காக கவலைப்படும் நல்ல உள்ளங்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.
//
சரியாச் சொன்னீங்க.
இது போல் மனிதர்கள் பார்ப்பது மிகவும் அரிது சகோ!
பல்வேறு மனிதர்கள் பற்றி நல்லா அலசி இருக்கீங்க! நல்லா பகிர்வு!
மனைவி: தே.. சும்மாக் கிட..கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா மில்லுக்கு ஒரே கைலிய கட்டிட்டு போய்க்கிட்டு இருக்க.. நாலு இடம் போற வர மனுஷன்.. உனக்கு நாலு துணி வாங்கினா ஒண்ணும் தப்பு கிடையாது.. வா..//
அம்மாவுக்கு பிறகு ஒரு மனிதனை பார்த்து கொள்வது மனைவிதான்... அவன் டும்பம் என்ற அலைவான்.. மனைவி கணவன் என்று அலைவாள்...
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா உட்கார்ந்து யோசிச்சுருக்கிங்க..
//.. கதிர் - ஈரோடு said...
பிச்சை எடுத்து குடிக்கிறவனுக்கு பிச்சை போட்டால் தப்பு, லஞ்சம் வாங்கி குடிப்பவனுக்கு தொடர்ந்து லஞ்சம் கொடுக்கத்தானே செய்கிறோம்..//
ஆனா, லஞ்சம் கொடுத்தா வேல நடக்குதே.. :-) (நல்லா கவனிச்சுக்குங்க smily போட்டுருக்கேன்)
//.. jackiesekar said...
அவன் டும்பம் என்ற அலைவான்.. மனைவி கணவன் என்று அலைவாள்... //
இனிமேல் அதெல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேங்க.. :-(
பகிர்வுகள் அனைத்தும் அருமை.
- பொன்.வாசுதேவன்
ரசித்துப்படித்தேன் - செல்வேந்திரன்
//அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். //
நல்ல பகிர்வு கார்த்தி !
அசல் வேட்டைக்காரன் மோதினால் செம ஜாலி தான்....
பார்ப்போம் எனக்கு என்னமோ வேட்டைக்காரன் முன்னாடியே
வந்து விடும் என்று நினைக்கிறேன்.
யோசித்த அத்துனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பா
//"பட்டாசுகளை எல்லாம் பத்திரமா வெடிங்க.. அது உங்க சேப்டிக்கு. தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு..//
உண்மையிலேயே மேவி பொதுநலவாதியப்பா!
மதுரைக்காரவுங்க பாசத்துக்குமட்டுமில்ல ரசனைக்கும் பேர் வாங்குனவங்கன்னு நிரூபிக்கிறீங்க ....
nice post ..
கார்த்தி உங்கள் அழகான ஆர்பரிப்பு இல்லாத மனதில் தோன்றுவதை வர்ண ஜாலங்கள் இல்லாமல் வெளிப்படுத்தும் பாங்கிற்கு ஒரு சல்யூட்
வாழ்க வளமுடன்...
//ஜெயகாந்தனோட ஒரு கதைல படிச்சு இருக்கேன். இந்த மாதிரி விளிம்பு நிலை மனிதர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே பொழுதுபோக்கு அதுதானே.. அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?//
அதான் அரசு மருத்துவமனையில் இலவசமா குடும்ப கட்டுபாடு செய்து விடுவாங்களே.... அது தெரியாதா விளிம்பு நிலை மனிதர்களுக்கு!
:)
நான் கொஞ்சம் லேட். மேவி கிட்ட மாட்டினா அவ்வளவுதான். :) கண்டேன் காதலை நல்லா இருக்கணும்னு வேண்டிட்டு இருக்கேன். :) நல்ல பதிவு. :)
//தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு..//
வாத்தியார்க்கே பாடமா ?
யோசித்த அத்துனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பா
என்னத்த சொல்ல, பட்டைய கிளப்பறிங்க என்றத தவிர.
தங்கச்சி தலை தீபாவளிக்கு வந்திருக்க,
சேப்டியாவும் மகிழ்ச்சியாவும் தீபாவளியை கொண்டாடினீர்களா?
ஜெயகாந்தன் சொன்னது சத்தியமான வார்த்தை. இந்த வசனம் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் கூட வரும்.
எனது கவிதை தங்களது விருப்பப்பட்டியலில் பார்த்தேன்.நன்றி
Hi, Two days back, I got an opportunity to see your blog. I liked it very much, especially "Ukkanthu Yosichadhu". Awesome.. Unga blog paathadhukku appuram unga friendship venumnu thonudhu.... naanum blog ezhudha aarambikkanumnu thonudhu.. Kalakkitteenga...
amssaravanan@gmail.com ku mudincha reply pannunga..
Post a Comment