August 21, 2010

கைபேசி எண் 9677027783 - திரைப்பார்வை

முன்னுரை

கார்த்தி கார்த்தின்னு ஒரு கிறுக்கன், இன்னொரு கார்த்திங்குற கிறுக்கன் நடிச்ச "நான் மகான் அல்ல" படத்துக்குப் போகலாம்னு கிளம்பினான். ஆனா பாருங்க.. மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்ல டிக்கட்டு நூத்தி இருபது ரூபாய்ன்னு சொல்லிட்டாய்ங்க. இந்தப் பரதேசிப்படத்துக்கு இது ரொம்ப ஜாஸ்தின்னு வேற ஏதாவது படத்துக்குப் போகலாம்னு கார்த்தி முடிவு பண்ணினான். என்ன படத்துக்குப் போகலாம்?

அஆங்... விளம்பரம் எல்லாம் வித்தியாசமா ஏதோ ஒரு படம் இருந்துச்சே.. பேய்ப்படம் மாதிரி... கைபேசி எண்.. அதுக்கே போகலாம்னு ஜெயம் தியேட்டருக்குப் போயாச்சு. என்னது.. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சா? அது கதையல்ல.. ஒரு கறுப்பு சரித்திரம். பொதுவாச் சொல்லணும்னா "கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா.." அதேதான்.


பொருளுரை

கதை

கும்மிருட்டு. ஒரு பாழடைஞ்ச பங்களா. வெள்ளை ட்ரெஸ்ல ஒரு பெண் அல்லது பிகர் அல்லது பேய்.. நடக்குது நடக்குது நடந்துகிட்டே இருக்கு.காடு மலை தோப்புன்னு நடந்து அந்த பங்களாக்கு வருது. அப்படியே லோ ஆங்கிள், டாப் ஆங்கிள், க்ளோசப்ல முதுகுன்னு மெரட்டுறோம்.. பின்னணில நாய், நரி, நாதாரி எல்லாம் ஊளையிடுது.. என்னது? இதை எல்லாம் இயக்குனர் பாத்துக்கிடுவாரு.. நான் கதை என்னான்னு மட்டும் சொன்னாப் போதுமா? ஓகே ஓகே.. கூல் டவுன்..

ஒரு பையன் - நாயகன். ஒரு பொண்ணு - நாயகி. அவங்களுக்குள்ள தெய்வீகக் காதல். வீட்டுல தெரிஞ்சு ஒரே பிரச்சினை. ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க (அ) கல்யாணம் பண்ணிட்டு ஓடி வராங்க. ஏதோ ஒரு ஊர்ல ஏதோ ஒரு வீடு எடுத்துத் தங்குறாங்க. அங்க எதிர்த்த வீட்டுல ஒரு முசுட்டுப் பொம்பள. அவளுக்கு ஆம்பளைங்களக் கண்டாலே பிடிக்காது. கர்ப்பமா இருக்குற நம்ம நாயகிக்கு எல்லா உதவியுமே செய்யுறா.

பிள்ள நல்லாப் பிறக்கணும்னு வேண்டிக்கிறதுக்காக நாயகன், நாயகி, முசுடு மூணு பேரும் ஒரு மலைக்கோயிலுக்குப் போறாங்க. திரும்பி வர வழியில கார் ரிப்பேர். ராத்திரிக்கு ஒரு பாழடைஞ்ச பங்களால தங்குறாங்க. அங்கே ஆவி நடமாட்டம் இருக்கு. அப்புறம் என்ன ஆச்சுன்னு.. சரி சரி.. எப்படியும் நீங்க யாரும் தியேட்டர்ல போய் பார்க்கப் போறதில்ல. தெரிஞ்சும் ஒண்ணும் ஆகப் போறதில்ல.. விடுங்கப்பா.

நடிகர்கள்

தமிழ்த் திரையுலகத்துல சமீப காலத்துல இப்படி ஒரு நடிப்பு சூறாவளிய யாரும் பார்த்திருக்க முடியாது. ஆதர்ஷ்னு பேராம். தயாரிப்பாளர் மகனா இருப்பாரோ? மொதமொத காதலிக்கிட்ட குனிஞ்சு வளைஞ்சு "ஐ லவ் யூ"ன்னு சொல்றப்பவே படம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சு போச்சு. ஆள் அசப்புல நம்ம பரிசல்காரன் மாதிரியே இருக்கார். குரல் கூட கிட்டத்தட்ட அப்படியே.. ஆனா நான் இப்படி எழுதி இருக்குறத படிச்சுட்டு இந்தப் படத்த பரிசல் பார்த்தா, அவர் தூக்குப் போட்டுத் தொங்குறது உறுதி. பொண்டாட்டியக் காணோம்னு போலிஸ் ஸ்டேஷன்ல வந்து "அர்ஜென்ட் சார்"னு அவதியா உணர்ச்சியோட சொல்றப்ப பக்கத்துல இருக்குறவர் சவுண்ட கொடுத்தாரு பாருங்க.. " சீக்கிரமா பாத்ரூமுக்குப் போடா பரதேசி.."

படத்துல ரெண்டு குஜிலிங்கோ. நாயகி மற்றும் வில்லி. ஒண்ணு பேரு ஜில்லு. இன்னொண்ணு பேரு ஆஷி. ஆனா யாரு யாருன்னுதான் தெரியல. படத்தோட டைட்டில் போடறப்பவே நினச்சேன்.. என்னடா ஹீரோயினி பேரெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கேன்னு... தப்பு பண்ணிட்டமோ? உள்ள நொழஞ்சதுக்கு அப்புறம் பொலம்பி என்ன பண்றது? ஆனாலும் நாயகி தாவணில வரப்போ ரொம்பவே அழகா இருந்துச்சு. கொடுத்த காசுக்கு படத்துல அது ஒண்ணுதான் மிச்சம்.

தொழில்நுட்பம்

அப்படி ஒண்ணு படத்துல இருக்குதா?

இசைவாணன்னு ஒருத்தர்தான் இசை. இதுக்கு முன்னாடி மலையாள கில்மா படத்துக்கு எல்லாம் மூஜிக் போட்டுக்கிட்டு இருந்திருப்பாரு போல. லவ் சீன்ல எல்லாம் ஒரே முக்கல் முனகல் சவுண்டு. தியேட்டருக்கு வந்திருந்த நாப்பது பேர்ல ரெண்டே ரெண்டு பிகருங்க.. அதுகளுக்கு வெக்கம் தாங்காம ஒரே சிரிப்பு.. (என்னது.. உங்களுக்கு எப்படித் தெரியுமா? ஹி ஹி ஹி.. தேடிப்பிடிச்சு அதுங்க இருந்த "ரோ"ல போயில உக்கார்ந்தோம்..) படத்துல ஒரு நல்ல விஷயம் - பாட்டே கிடையாது. அப்பாடா.. தப்பிச்சோம்டா..

எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ். அந்தப் பேரப் பார்த்துத்தான் நான் ஏமாந்து போயிட்டேன். தாஜ்னு ஒருத்தரோட ஒளிப்பதிவு. அப்புறம் ராமதுரை - கலை இயக்கம். எல்லாருமே படத்துல உப்புக்கு சப்பாணி.

இயக்கம்

விஷ்வக்சேனன் அண்ணே.. உங்களால தமிழ் சினிமாக்கு ஒரே ஒரு நல்ல விஷயம்தான் செய்ய முடியும்.. தயவு செஞ்சு ஆப்பிரிக்காவுக்கு ஓடிப் போயிடுங்க.. ஓரளவுக்கு நல்ல கதையைக் கூட எப்படி எல்லாம் கொத்து புரோட்டா போடலாம்னு யோசிச்சு படம் எடுத்து இருக்கீங்க.

உங்க திறமைக்கு ஒரு சாம்பிள் காட்சி.. கர்ப்பிணிப் பொண்ணு கையில முட்டையோட பிரிட்ஜை தொறக்குரா.. அப்பப் பார்த்து அவ கருவைக் கலைக்க வீட்டுக்கார சைக்கோ கொடுத்த மருந்து வேலை செய்து.. கைல இருக்குற முட்டை கீழ விழுந்து உடைய, அந்தப் பொண்ணோட வயித்துல இருக்குற கரு கலைய.. போதும்.. இத்தோட நிறுத்திக்கலாம்.

முடிவுரை

இதுக்கு அப்புறமும் அங்கே முடிக்க என்ன இருக்கு? அதுதான் மொத்தமா எல்லாத்தையும் முடிச்சு அனுப்பிட்டாய்ங்களே. பாண்டியா.. இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? பீ கேர்புல்.. நான் என்னைச் சொன்னேன்.

ஆக மொத்தத்தில் இது ஒரு காவியம்.. மணிக்காவியம்.. ஒப்பற்ற ஒலக காவியம்.

20 comments:

அன்பேசிவம் said...

///இந்தப் பரதேசிப்படத்துக்கு இது ரொம்ப ஜாஸ்தின்னு வேற ஏதாவது படத்துக்குப் போகலாம்னு கார்த்தி முடிவு பண்ணினான்.///

:-(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் புலம்பல்ங்க :)

அகல்விளக்கு said...

இந்த படத்த "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு போட்டாக்கூட கேபிள்ஒயரை கழட்டி வச்சிட்டு காத்தாட நடக்கப் போயிரணும்"...

விமர்சனம் படிச்ச என்னாலயே முடியலயே...

நீங்க எப்படிண்ணே.... அவ்வளவு சோகத்தையும் உள்ளுக்குள்ள மறைச்சு விமர்சனம் எழுதுறீங்க....

:(

மதன் said...

” அகல்விளக்கு said...
இந்த படத்த "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு போட்டாக்கூட கேபிள்ஒயரை கழட்டி வச்சிட்டு காத்தாட நடக்கப் போயிரணும்"...

விமர்சனம் படிச்ச என்னாலயே முடியலயே...

நீங்க எப்படிண்ணே.... அவ்வளவு சோகத்தையும் உள்ளுக்குள்ள மறைச்சு விமர்சனம் எழுதுறீங்க....

:(”

ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப மனதைரியம் பாஸ் :-)

Unknown said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Anbu said...

முன்னுரை ரொம்ப அருமை அண்ணே...மீதம் படிச்சுட்டு கமெண்ட் போடுறேன்..

Anbu said...

இதுக்கு நீங்க அந்த பரதேசிபடத்துக்கே போயிருக்கலாம்..

:-((

Anbu said...

இதுக்கு நீங்க அந்த பரதேசிபடத்துக்கே போயிருக்கலாம்..

ஏன் சொல்றேன் அப்படின்னா அந்த பரதேசி படத்தை கவுதம் மேனன் இயக்கவில்லை..ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் போடலை..

அத்திரி said...

)))))))))))))))

உண்மைத்தமிழன் said...

தம்பி..

இந்த ஜெயம் தியேட்டர் மதுரைல எங்க இருக்கு..?

ஆண்டவன் கட்டளை ! said...

இந்த நம்பர்...டைரக்டரோடதுதான்...
போன் போட்டு பேசுங்க....

கார்த்திகைப் பாண்டியன் said...

// முரளிகுமார் பத்மநாபன் said...
:-(//

ஆகா.. தல.. நீங்க கார்த்தி ரசிகரா? கிழிஞ்சது போங்க

// ச.செந்தில்வேலன் said...
கலக்கல் புலம்பல்ங்க :)//

என் வேதனை உங்களுக்கு கலக்கலா? போங்கண்ணே.. உங்க பேச்சு டூக்கா..

// அகல்விளக்கு said...
இந்த படத்த "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாகன்னு போட்டாக்கூட கேபிள்ஒயரை கழட்டி வச்சிட்டு காத்தாட நடக்கப் போயிரணும்"..//

LoL..:-)))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// டுபாக்கூர்கந்தசாமி said...
நீங்க எப்படிண்ணே.... அவ்வளவு சோகத்தையும் உள்ளுக்குள்ள மறைச்சு விமர்சனம் எழுதுறீங்க....
ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப மனதைரியம் பாஸ் :-)//

பொதுசேவைன்னு வந்தாச்சு.. அப்புறம் என்ன.. எதையும் தாங்கும் இதயம்..:-))

//முகிலன் said...
ஆழ்ந்த அனுதாபங்கள்//

சொல்றப்பவே ஒரு சந்தோசம்.. ஹ்ம்ம்ம்.. ஆல் மை டைம்

//Anbu said...
இதுக்கு நீங்க அந்த பரதேசிபடத்துக்கே போயிருக்கலாம்..ஏன் சொல்றேன் அப்படின்னா அந்த பரதேசி படத்தை கவுதம் மேனன் இயக்கவில்லை.. ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் போடலை.//

டாய்.. வி.தா.வ பிடிக்கலைன்னு சொன்னதிலே இருந்து எம்மேல காண்டோட சுத்திக்கிட்டு இருக்க இல்ல? ஒரு திருத்தம்.. நான் ரகுமானோட தீவிர ரசிகன்.. சரியா? அந்த இன்னொரு பேருதான் இடிக்குது

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
)))))))))))))))//

நானும் ;-)))

//உண்மைத் தமிழன்said...
தம்பி.. இந்த ஜெயம் தியேட்டர் மதுரைல எங்க இருக்கு..?//

அண்ணே.. நம்ம பழைய நடராஜ் தியேட்டர்தாண்ணே இப்ப ஜெயம் ;-))

//ஆண்டவன் கட்டளை ! said...
இந்த நம்பர் டைரக்டரோடதுதான்...
போன் போட்டு பேசுங்க....//

அதுக்கு தூக்கு போட்டு சாகலாம் தல :-((((

க.பாலாசி said...

ஆமா படத்துக்கு ஏன் இந்தப்பேர வச்சாங்க...??

மேவி... said...

இதுக்கு நான் மகான் அல்ல படத்துகாச்சு போயிருந்த ...கஜல் அகர்வாலை யாச்சு பார்த்துட்டு வந்து இருக்கலாம் . எப்புடின்னே டிக்கெட் வாங்குறதுக்கு முன்னாடி யார்கிட்டேயும் கேட்க தோனலையா ?????

உங்க காலேஜ் பசங்க கிட்ட கேட்டு இருந்தால் கூட சொல்லிருப்பங்களே சார் ???

சென்ஷி said...

//கர்ப்பிணிப் பொண்ணு கையில முட்டையோட பிரிட்ஜை தொறக்குரா.. அப்பப் பார்த்து அவ கருவைக் கலைக்க வீட்டுக்கார சைக்கோ கொடுத்த மருந்து வேலை செய்து.. கைல இருக்குற முட்டை கீழ விழுந்து உடைய, அந்தப் பொண்ணோட வயித்துல இருக்குற கரு கலைய.. //

:)))

நல்ல டைரக்சன் டச்!

கார்த்திகைப் பாண்டியன் said...

// க.பாலாசி said...
ஆமா படத்துக்கு ஏன் இந்தப்பேர வச்சாங்க...??//

அது ஒரு பெரிய ட்விஸ்ட் தல.. முசுட்டு பொம்பளையோட புருஷன் ஒரு சைக்கோ.. சந்தேகப்பட்டு தாம்பெத்த பிள்ளையக் கொன்னுடுறான்.. அதுல டென்ஷன் ஆகி அந்தம்மா புருஷனக் கொன்னுடுராங்க.. செத்துப் போன பிள்ளையோட உடம்ப ஒரு பங்களாவுல வச்சுக்கிட்டு பேயா நடமாடுது அந்தம்மா.. அப்பப்போ செத்துப் போன தன்னோட கொழந்தகிட்ட அவங்க பேசுற கைபேசி எண்தான் படத்தோட பேரு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
இதுக்கு நான் மகான் அல்ல படத்துகாச்சு போயிருந்த ...கஜல் அகர்வாலை யாச்சு பார்த்துட்டு வந்து இருக்கலாம் . எப்புடின்னே டிக்கெட் வாங்குறதுக்கு முன்னாடி யார்கிட்டேயும் கேட்க தோனலையா ?????//

மேவி.. இப்போத்தான் நான் மகான் அல்ல பார்த்துட்டு வறேன்.. காஜல் அகர்வாலைப் பாக்குறதுக்கு இந்தப் படத்து ஜில்லு எவ்வளவோ பரவாயில்லப்பா..:-))

// சென்ஷி said...
:))) நல்ல டைரக்சன் டச்!//

ஆமா நண்பா.. நான் படம் பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்..:-)))

மதுரை சரவணன் said...

படம் ஓவரா பார்த்தா இப்படிதான் புலமப வேண்டியிருக்கும்