நாம் அனைவருமே நம் அன்றாட வாழ்கையில் இந்த ஒரு விஷயத்துக்காக ஆசைப்படுகிறோம்.. ஏங்குகிறோம்.. அது என்ன? (விடை.. பின்னாடி...)
நேற்று மாலை கல்லூரி முடிந்த பிறகு கணினியில் அமர்ந்து பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாலேகால் மணிக்கெல்லாம் முடிந்து விடும். அதன் பின்னர் தான் மக்களுடைய பதிவுகளைப் பார்க்கும்... நம்முடைய பதிவுகளை எழுதும் நேரம். என் கூட வேலை செய்யும் மேடம் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் செல்பவர். நேற்று ஏதோ வேலை என்பதால் இருந்து விட்டார் போல. மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார்.
"ஏன் சார், இதுல என்ன கிடைக்குதுன்னு தினமும் சாயங்காலம் உக்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்கீங்க.. உருப்படியா ஏதாவது செய்யலாம்ல..."
நான் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன். அவருக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும்.
"நீங்க எதுக்காக மேடம் ஓவியம் வரையுறீங்க..?"
"என்னோட ஆத்மதிருப்திக்கு..."
"சரி.. அதை எதுக்கு மத்தவங்ககிட்ட காமிக்கிறீங்க.. ?"
"அவங்களுக்கும் பிடிச்சிருந்தா பாராட்டுவாங்கல்ல.. அதுக்குத்தான்.. "
"நீங்க ஓவியம் வரையறது வேஸ்ட்ன்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?" அவருக்கு முகம் சுண்டிப் போனது. ஏதும் சொல்லாமல் எழுந்து போய் விட்டார்.
நான் ஏன் எழுதுகிறேன்?
நாம் எல்லாருமே சம்பளம் வாங்கிட்டுத்தான் வேலை பார்க்கிறோம். ஆனாலும், நமது அலுவலரோ.. முதலாளியோ.. இந்த வேலைய நீங்க நல்லா பண்ணி இருக்கீங்கன்னு பாராட்டும்போது சந்தோஷப்படுகிறோமா இல்லையா?
இந்த எல்லா கேள்விக்கும் ஒரே விடைதான். நாம் அனைவருமே அங்கீகாரத்திற்காக.. பாராட்டுக்காக ஏங்குகிறோம். சிறு குழந்தை ஒன்று தனது புத்தகத்தில் ஒரு படம் வரைந்து விட்டு நம்மிடம் கொண்டு வந்து நீட்டும்போது, நன்றாக இருக்கிறது என சொன்னால் அதன் முகத்தில் வரும் சந்தோஷத்திற்கு ஈடு கிடையாது. நம் அனைவருக்குள்ளும் அதே போல் ஒரு குழந்தை உண்டு. நாமும் அந்த ஆதரவைத் தேடுகிறோம்.
நேற்று மாலை ஆறு மணிபோல் ஒரு STD கால் வந்தது. நான் லண்டனில் இருந்து என் நண்பன் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டு "டேய் மகேஷ்.. சொல்றா மாப்ள.. " என்றேன். "நானும் நண்பர்தாங்க.. ஆனா மகேஷ் இல்ல" என்று வந்தது பதில். மலேஷியாவில் இருந்து பேசுவதாக சொன்னார். நண்பர் நிலாவன் என்னும் பெயரில் வலையில் எழுதி வருகிறார். பேச வேண்டும் எனத்தோன்றியதால் கூப்பிட்டதாக சொன்னார். என்னால் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் பேசினோம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டார். இதேபோல் போனவாரம் மதுராந்தகத்தில் இருந்து அகநாழிகை என்னும் பெயரில் எழுதி வரும் நண்பர் பொன்.வாசுதேவன் கூப்பிட்டு இருந்தார். அவருடனும் நிறைய பேச முடிந்தது.
இவ்வளவு ஏன்? திருப்பூரில் இருந்து எழுதி வருகிறார் நண்பர் ஆதவா. அவருடைய கவிதைகளைப் படித்தாலே எனக்கு கண்ணைக் கட்டும். அவ்வளவு அருமையாக எழுதுபவர். நாம் ஏதாவது ரெண்டு வரியை கிறுக்கி வைத்தால் கூட நம் தளத்துக்கு வந்து கவிதை நல்லா இருக்கு நண்பா என்று சொல்லி விட்டுப் போகிறார். முதலில் இருந்தே எனது எழுத்துக்களைப் படித்து ஊக்கப்படுத்தி வரும் பிரேம், நையாண்டி நைனா, கவின், ராம், சொல்லரசன்..(எல்லாருடைய பெயரையும் சொல்ல முடியவில்லை.. வருத்தம் கொள்ள வேண்டாம்..) இவர்களை எல்லாம் எனக்குத் தந்தது பதிவுலகம் தானே. இந்த அன்பும், புது நட்பும், உறவுகளை விட நமக்கு வேற என்ன வேண்டும்?
இந்த இரண்டு மாதங்களில் நம்முடைய எழுத்தை இத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். என் அம்மாவிடம் இதை பகிர்ந்து கொண்டபோது அவர்களுக்கு உண்டான மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. என் எழுத்தைப் படிக்கும், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு.
அதனால உனக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலைன்னு சொல்ற மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இதுதான்.. "போங்கப்பா.. போய் அவங்கவங்க வேலை வெட்டியப் பாருங்க..."
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
52 comments:
கார்த்திகைப் பாண்டியன்,
மதுரைக்காரரைப் பதிவுகளில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
பதிவுலகில் எழுதுவதன் தனி சுகம் எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும்...முகம் தெரியாத பல நட்புகள் கிடைப்பது..மிகவும் நல்ல விஷயம்..
//இவர்களை எல்லாம் எனக்குத் தந்தது பதிவுலகம் தானே. இந்த அன்பும், புது நட்பும், உறவுகளை விட நமக்கு வேற என்ன வேண்டும்? //
சரியாகச் சொன்னீர்கள்! பாசத்திற்கு ஏங்குபவர்கள்தான் காதலிலும் விழுகிறார்கள் என்பது ஒரு கணக்கு.
//பாச மலர் said..
மதுரைக்காரரைப் பதிவுகளில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..//
வருகைக்கு ரொம்ப நன்றி
//அன்புமணி said..
சரியாகச் சொன்னீர்கள்! பாசத்திற்கு ஏங்குபவர்கள்தான் காதலிலும் விழுகிறார்கள் என்பது ஒரு கணக்கு//
நண்பா.. நீங்க வேற ஏதோ வத்தி வைக்குற மாதிரி தெரியுது.. என்ன விட்டுருங்கப்பா..
என்னையும் சேர்த்திட்டிங்களா????
நண்றிங்க.....
நேரம்கிடைச்சா!!! அலைபேசிலை அழைக்கிறனுங்க!!!
பாச மலர் சொன்னது…
கார்த்திகைப் பாண்டியன்,
மதுரைக்காரரைப் பதிவுகளில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
பதிவுலகில் எழுதுவதன் தனி சுகம் எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும்...முகம் தெரியாத பல நட்புகள் கிடைப்பது..மிகவும் நல்ல விஷயம்..
///
பின்னிட்டிங்க!!!
நாம எல்லாம் சொந்தம் யாருமே இல்லாம. இங்கை தனிய தானுங்க இருக்கிறம்! வலைப்பதிவுதான்// ஒரே வேலை...
//கவின் சொன்னது…
நாம எல்லாம் சொந்தம் யாருமே இல்லாம. இங்கை தனிய தானுங்க இருக்கிறம்! வலைப்பதிவுதான்// ஒரே வேலை...//
நாங்கல்லாம் இருக்கோம் தலைவா!
//கவின் said..
நாம எல்லாம் சொந்தம் யாருமே இல்லாம. இங்கை தனிய தானுங்க இருக்கிறம்//
அன்புமணி சொன்னது மிகச்சரி.. என்றும் தனியாக இருக்கிறோம் என எண்ண வேண்டாம்.. நாங்கல்லாம் இருக்கோம்ப்பா
முதல்ல ஓட்டு!!!!
----------------
இப்போ விமர்சனம்!!
\\\சிறு குழந்தை ஒன்று தனது புத்தகத்தில் ஒரு படம் வரைந்து விட்டு நம்மிடம் கொண்டு வந்து நீட்டும்போது, நன்றாக இருக்கிறது என சொன்னால் அதன் முகத்தில் வரும் சந்தோஷத்திற்கு ஈடு கிடையாது. நம் அனைவருக்குள்ளும் அதே போல் ஒரு குழந்தை உண்டு. நாமும் அந்த ஆதரவைத் தேடுகிறோம்.\\
நன்றாக இருந்தது அண்ணா!!
//அன்புமணி சொன்னது…
//கவின் சொன்னது…
நாம எல்லாம் சொந்தம் யாருமே இல்லாம. இங்கை தனிய தானுங்க இருக்கிறம்! வலைப்பதிவுதான்// ஒரே வேலை...//
நாங்கல்லாம் இருக்கோம் தலைவா!
February 18, 2009 6:35 PM
கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
//கவின் said..
நாம எல்லாம் சொந்தம் யாருமே இல்லாம. இங்கை தனிய தானுங்க இருக்கிறம்//
அன்புமணி சொன்னது மிகச்சரி.. என்றும் தனியாக இருக்கிறோம் என எண்ண வேண்டாம்.. நாங்கல்லாம் இருக்கோம்ப்பா
//
இந்த நம்பிக்கையொலதாங்க.... வலைபதிவிலை ச்சும்மா கிறுக்கிட்டு இருக்கம்!!
பொன்னியின் செல்வா ...நானும் மதுரை தாம்ப்பா ...பாசக்கார புள்ளைங்கள்ல நாம எல்லாம்
எழுதுவதில் உள்ள திருப்தி அது எழுத்தாளர்களுக்கு மாத்திரமே தெரியக்கூடிய விசயம். சிலர் திருப்திக்காக மட்டும் எழுதுகிறார்கள்,, நம் வலைத்தள நண்பர்களைக் குறிப்பிடலாம். சிலர் பணத்துக்காகவும் எழுதுகிறார்கள்... தவறில்லை.
நான் ஏன் எழுதுகிறேன்? என்னை யார் எழுத வைப்பது?? இதற்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவரவர் படைப்புகள் அவரவரோடே உறங்கிக் கொண்டிருந்தால் எழுதி பயனில்லை//
நான் முன்பிருந்து இன்றுவரையிலும் தமிழ்மன்றம்.காம் இல் எழுதி வருகிறேன். அது ஒரு Forum தளம். கிட்டத்தட்ட ஐம்பது பேர் நன்கு பழகுகிறார்கள், அதில் பாதிக்கும் மேற்பட்டோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன், போனிலும் கூட.... தினமும் ஒருவராவது அழைக்காமல் இல்லை (நம்ம கிட்ட பேலன்ஸ் லோ ங்க.. அதான் யாருக்கும் கூப்பிடறதில்லை அவ்வ்.....)
ப்ளாக்கர் எனக்கு பழக்கமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் ஆயிரம் பார்வைகள், ஒரு படைப்புக்கு சராசரி பதினைந்து பின்னூக்கங்கள் என்று நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது... இதற்கெல்லாம் காரணம், நம் வலைத்தள நண்பர்களே!.. நானும் கசகசவென்று போய் படிப்பதில்லை.. எனக்குப் பிடித்திருந்தால் படிக்கிறேன்.
ஆஸ்திரேலியாவிலிருக்கும் நண்பர் கமல் தான் எனக்கு வலைத்தளத்தை தமிழ்மணத்தில் இணைத்துக் கொடுத்தார். பின்னர் அவரே ஒருமுறை எனக்குக் கூப்பிட்டும் இருந்தார்..
அமெரிக்கா டூ ஆஸ்திரேலியா வரை எல்லா நாட்டிலுமிருந்து அலைப்புக்கள் வந்திருக்கின்றன. எல்லாமே எழுத்தாளர்களால்தான்!!1
இப்படி பலமுறை சிலாகித்திருக்கிறேன்..
என் தளத்தில் ஆயிரம் பார்வைகள் தாண்டியதும் நன்றி கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. நீங்கள் அதற்குள் முந்திக் கொண்டீர்கள்... நானும் விடுவதாக இல்லை.
கண்கவரும் பதிவு இது!!!!!
திருப்பூரில் இருந்து எழுதி வருகிறார் நண்பர் ஆதவா. அவருடைய கவிதைகளைப் படித்தாலே எனக்கு கண்ணைக் கட்டும். அவ்வளவு அருமையாக எழுதுபவர். நாம் ஏதாவது ரெண்டு வரியை கிறுக்கி வைத்தால் கூட நம் தளத்துக்கு வந்து கவிதை நல்லா இருக்கு நண்பா என்று சொல்லி விட்டுப் போகிறார்.
ஆஹா!!!!! என்னைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! மயிற்கூச்செறிகிறது!! நன்றி நண்பரே!
என்னடாச் சொல்றது... எல்லாம் பாசக்கார புள்ளைங்களா இருக்காங்க....
நண்பா... உன்னை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு...
ஓட்டு போட்டதுக்கு நன்றி ஆதவா..
//anbu said..
நன்றாக இருந்தது அண்ணா!!//
வருக அன்பு.. இவரும் எனக்கு இப்போது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் நண்பர்.. இந்த பதிவு உங்கள் அனைவருக்காகவும்தான்..
//Rajeswari said..
பொன்னியின் செல்வா ...நானும் மதுரை தாம்ப்பா ...பாசக்கார புள்ளைங்கள்ல நாம எல்லாம்//
நன்றி.. உங்கள் தளத்தைப் பார்த்தேன்.. நல்ல ஆரம்பம்.. அப்பப்போ வந்து போங்க..
//ஆதவா said..
என் தளத்தில் ஆயிரம் பார்வைகள் தாண்டியதும் நன்றி கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. நீங்கள் அதற்குள் முந்திக் கொண்டீர்கள்... நானும் விடுவதாக இல்லை.
கண்கவரும் பதிவு இது!!!!!//
விரிவான விமர்சனத்துக்கு நன்றி.. நீங்களும் போடுங்க நண்பா..
//ஆதவா said..
ஆஹா!!!!! என்னைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! மயிற்கூச்செறிகிறது!! நன்றி நண்பரே! //
உண்மையைத்தானே சொன்னேன் நண்பா..
//நையாண்டி நைனா said..
நண்பா... உன்னை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நைனா..
//அதனால உனக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலைன்னு சொல்ற மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இதுதான்.. //
தமிழ் எமுத படிக்க வாய்ப்பு இல்லாத துறையில் 15 ஆண்டுகளாக இருந்து கொண்டு தமிழை எமுத மறந்து விடுவோம் என்ற நிலையை மாற்றிய தளம் இது. அந்த மேடத்திடம் சொல்லுங்கள் தமிழை அறிந்த அனைவரையும் கவிஞனாக,எமுத்தாளர்ராக சிந்தனைவாதியாக,உலக தமிழனத்தை ஒன்றுபட வைத்த அற்புத களம் இது என்று
நல்ல பதிவு நண்பா....
நிச்சயமாக, முகம் தெரியாத பல நண்பர்களை தந்துள்ளதை மறுப்பதிற்கில்லை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நம்ம பயலுவ பாசக்கார புள்ளைங்க..........நல்லாத்தான்டே எழுதியிருக்க......
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
என் அம்மாவிடம் இதை பகிர்ந்து கொண்டபோது அவர்களுக்கு உண்டான மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது
amma ketta solluga iniku en blogala oru newadminison vanthu irnthaganu.
enna yosikerenga athu naan thanga
naanum unga kudanila seralamla
சரியா சொன்னிங்க..
//சொல்லரசன் said..
தமிழ் எமுத படிக்க வாய்ப்பு இல்லாத துறையில் 15 ஆண்டுகளாக இருந்து கொண்டு தமிழை எமுத மறந்து விடுவோம் என்ற நிலையை மாற்றிய தளம் இது. அந்த மேடத்திடம் சொல்லுங்கள் தமிழை அறிந்த அனைவரையும் கவிஞனாக,எமுத்தாளர்ராக சிந்தனைவாதியாக,உலக தமிழனத்தை ஒன்றுபட வைத்த அற்புத களம் இது என்று//
உண்மை நண்பா.. இன்று பதிவுலகின் மூலம் ஒரு புரட்சி நடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
//சம்பத் said..
நல்ல பதிவு நண்பா...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
//எட்வின்..
நிச்சயமாக, முகம் தெரியாத பல நண்பர்களை தந்துள்ளதை மறுப்பதிற்கில்லை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//
ரொம்ப நன்றி எட்வின்
//அத்திரி said..
நம்ம பயலுவ பாசக்கார புள்ளைங்க..........நல்லாத்தான்டே எழுதியிருக்க......//
எல்லாருமே பாசக்காரப் பயலுகதேன் அண்ணாச்சி.. வருகைக்கு நன்றி..
நன்றி வலைப்பூக்கள்..
// gayathri said...
amma ketta solluga iniku en blogala oru newadminison vanthu irnthaganu.enna yosikerenga athu naan thanga ..naanum unga kudanila seralamla//
வாங்க காயத்ரி.. you are most welcome to join us.. thanks..
// vinoth gowtam said..
சரியா சொன்னிங்க..//
வருக வினோத், பின்தொடர்வதற்கு நன்றி
//அதனால உனக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலைன்னு சொல்ற மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இதுதான்.. "போங்கப்பா.. போய் அவங்கவங்க வேலை வெட்டியப் பாருங்க..."//
என்னங்க, நெத்தியடி மாதிரி 'நச்'சுன்னு ஒரு போடு.
அந்த நண்பர்கள் லிஸ்ட்ல நானும் (புது வரவு) ஒருத்தன்னு சொல்லிகரதுல எனக்கும் பெருமைதான் வாத்தியாரே!!!!!
//rad madhav said..
என்னங்க, நெத்தியடி மாதிரி 'நச்'சுன்னு ஒரு போடு.//
என்ன நண்பா செய்ய.. ஒரு சிலருக்கு அப்படி சொன்னாத்தானே புரியுது..வருகைக்கு நன்றி..
//bharathi said..
அந்த நண்பர்கள் லிஸ்ட்ல நானும் (புது வரவு) ஒருத்தன்னு சொல்லிகரதுல எனக்கும் பெருமைதான் வாத்தியாரே!!!!!//
வாங்க தோழரே.. தொலைபேசில கூப்பிட்டதுக்கு ரொம்ப சந்தோசம்.. அடிக்கடி வந்து போங்க..
nalla solli irukkenga :) :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க..
என்னோட சக்கரத்துலே வச்சு நச்சமாதிரி சொல்லி இருக்கீங்க...
I mean, வெட்டு ஒன்னு துண்டு பல...
அடேங்கப்பா.. கூட்ஸ்வண்டி.. வாங்க வாங்க.. ரொம்ப நாள் ஆச்சு இல்லையா?.. ரொம்ப நன்றி..
ரெம்ப நன்றிங்க கார்த்திகைபாண்டியன்.
எனக்கு ரெம்ப சந்தோசமாக
இருக்கிறது
உங்களை போல் நல்ல நண்பர்களை
தந்த பதிவுலகத்திற்கு நன்றி நன்றி நன்றி ...
வருக நிலாவன்.. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. ரொம்ப நன்றி..
Sariya sonneenga sir
வருகைக்கு நன்றி தமிழிசை
Nanraaga irunthathu
கருத்து சொன்ன அனானிக்கு நன்றி..
உங்க கருத்துக்கள் அருமை நன்பரே :)
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளில் வார்த்திருக்கிறீர்கள்.உங்களின் அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது தோழரே..! யாருக்காக எழுதுகிறேன்? என்று எனக்கே தோன்றும் சில நேரங்களில்...எனக்காக ,என் ஆத்மா திருப்திக்காக .. அதில் ஏற்படும் இன்பம் ஆனந்த மயமானது.அனுபவித்து பார்க்கும் போது தான் உணர முடியும்.என்னை ஊக்குவிக்க,என் எண்ணங்களோடு பயணிக்கின்ற அருமையான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.பகிர்வுக்கு நன்றி தோழர் !
Post a Comment