October 18, 2009

ஆதவன் - திரைவிமர்சனம்..!!!


1980களில் ரஜினி நடித்து தாய்வீடு என்று ஒரு படம் வந்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். அதே கதையை கொஞ்சம் உல்டா செய்தால் ஆதவன் ரெடி. நோ லாஜிக், ஒன்லி மேஜிக் - இதுதான் கே.எஸ்.ரவிக்குமார் படங்களின் தாரக மந்திரம். ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் படம் பார்த்தால் ரெண்டு மணி நேரம் பொழுது போக்கி விட்டு வரலாம். ஆதவனிலும் அதே கதைதான். குருவி என்னும் மாபெரும் வெற்றிப் படத்துக்குப்(?!!) பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம்.

கூலிக்கு கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. அவரைக் கொலை செய்வதற்காக வேலைக்காரன் வேசத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சூர்யா. உண்மையில் முரளிதான் சூர்யாவின் அப்பா. உண்மை தெரிந்து கடைசியில் எப்படி வில்லன்களிடம் இருந்து தன் அப்பாவை சூர்யா காப்பாற்றுகிறார் என்கின்ற ஹைதரலி, ஷாஜகான், பாபர் காலத்து கதைதான் ஆதவன்.

மாஸ் ஹீரோ ஆக முயற்சி செய்திருக்கிறார் சூர்யா. (வேணாம்னே.. சொன்னாக் கேளுங்க. படத்துக்குப் படம் ஏதோ வித்தியாசமா பண்றீங்கன்னுதான் உங்க படத்துக்கு வரோம். அதுல மண்ண அள்ளிப் போடாதீங்க...) அழகாக இருக்கிறார். ஆடுகிறார். பாடுகிறார். நடிப்பதற்கு வாய்ப்பில்லாத படத்தில் அவரால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. பிளாஷ்பேக்கில் பத்து வயதுப் பையனாக வரும் காட்சிகளில் மார்பிங் படு கேவலமாக இருக்கிறது. தன் கலையுலக வாழ்வில் முதல் முறையாக ஒரு படத்தில் இடையைக் காட்டாமல் நடித்து இருக்கிறார் நயன்தாரா. பரிகாரமாக ஒரு பாட்டில் "பம்பாய் - மணிஷா கொய்ராலா" மாதிரி ஓட விட்டிருக்கிறார்கள். பாடல்களுக்காக வந்து போகிறார். க்ளோசப் ஷாட்டுகளில் பாட்டி மாதிரித் தெரிகிறார்.

முதல் பாதியின் உண்மையான ஹீரோ வடிவேலுதான். ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். அட்டகாசம். பரத் முரளியின் கடைசிப் படம். நன்றாக நடித்து இருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் பெரிய பட்டாளத்தில் நம்மை இம்சை செய்பவர்களில் முதலிடம் சரோஜா தேவிக்கு.. இரண்டாமிடம் ரமேஷ் கண்ணாவிற்கு.... மூன்றாமிடம் ஷாயாஜி ஷிண்டேவுக்கு. லூசுத்தனமான வில்லன் வேடத்தில் ராகுல்தேவ். எப்போதும் விஜயகாந்த் படங்களில் இஸ்லாமியத் தீவிரவாதியாக வருபவர் இதில் கொலைகார டாக்டராக வருகிறார். வில்லன்கள் எல்லோருமே இஸ்லாமியராக சித்தரிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது.

இரண்டாம் பாதி படத்தின் ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ். மூன்று அருமையான பாடல்களும் இரண்டாவது பாதியில்தான் வருகிறது. ஏனோ ஏனோ பாட்டும், ஹசிலி பிசிலி பாட்டும் படமாக்கப்பட்டு இருக்கும் விதம் அருமை. வெளிநாடுகளின் அருமையான லொகேஷன்களில் படமாகி இருக்கும் ஒளிப்பதிவாளர் கணேஷுக்கு பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பவர் கனல்கண்ணன். படத்தின் ஆரம்பத்தில் வரும் சேசிங் காட்சி தூள். டான்மேக்சின் எடிட்டிங் ஓகே ரகம்தான்.

ரமேஷ் கண்ணாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். ஹீரோயிசம், சிரிப்பு, சண்டை, நாலு பாட்டு என தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டு நகர மறுக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் படு மந்தம். அதே போல கிளைமாக்ஸ். இத்தனை ரணகொடூரமான கிளைமாக்சை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. காரில் இருக்கும் பாமை, அந்தரத்தில் பறந்து போய் பிடுங்கி, ஹெலிகாப்டரில் கொண்டு சூர்யா சொருகும் காட்சியில் நமக்கு கண்களில் ரத்தக்கண்ணீரே வருகிறது. தசாவதாரம் படத்துக்குப் பின் வரும் ரவிக்குமார் படம் என்று ரொம்ப எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஆதவன் - ஆவரேஜ்

36 comments:

தேவன் மாயம் said...

நானே முதல் போணி!

தேவன் மாயம் said...

கார்த்தி ! டூ பாஸ்ட்!!!

தேவன் மாயம் said...

உண்மை தெரிந்து கடைசியில் எப்படி வில்லன்களிடம் இருந்து தன் அப்பாவை சூர்யா காப்பாற்றுகிறார் என்கின்ற ஹைதரலி, ஷாஜகான், பாபர் காலத்து கதைதான் ஆதவன்.///

புதுசா எவன் கதை எழுதுவது? எல்லாம் ரீமிக்ஸ்தான்!!

Anonymous said...

"வில்லன்கள் எல்லோருமே இஸ்லாமியராக சித்தரிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது".

நல்ல சொன்னிக, இப்ப இருக்கிற இந்து திவிரவதிய பத்தி படம் எடுத்தல், ராம கோபாலன் வந்து பிரச்சினை பண்ணுவன் என்று இஸ்லாமியனை கட்டுகிறார்கள். இப்ப இருக்கிறதுல அவன் தானே இளிச்சவாயன்

பீர் | Peer said...

//ஒரு படத்தில் இடையைக் காட்டாமல் நடித்து இருக்கிறார் நயன்தாரா.//

அப்ப படத்துக்கு தைரியமா போகலாம்... (அடுத்த வரிகளை நான் படிக்கவில்லை)

vasu balaji said...

:)).

வினோத் கெளதம் said...

சூர்யவுமா..தாங்காதுடா சாமி...

தருமி said...

//980களில் ரஜினி நடித்து தாய்வீடு என்று ஒரு படம் வந்தது//

என்ன ஒரு என்சைக்ளோபீடியா ..! அதெல்லாம் ஞாபகத்தில இருக்கு .. அம்மாடி ..........

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் எல்லாப்படமும் பாத்துடறாப்ல இருக்கு - அது சரி - நானும் ப்பாத்துடறேன் - சரியா

நல்வாழ்த்துகள் காபா

ஜெட்லி... said...

//ஆதவன் - ஆவரேஜ்

//
கரெக்ட் .... விமர்சனம் சூப்பர்

ramalingam said...

ரஜினிக்கே மறந்திருக்கும் தாய் வீட்டின் கதை!

அ.மு.செய்யது said...

டிரெயிலர் நல்லா இருந்துதுங்களே !!!!?!?!?!?

இராகவன் நைஜிரியா said...

நல்ல விமர்சனம்.

நடு நிலை விமர்சனம்.

நன்றி.

Unknown said...

///வில்லன்கள் எல்லோருமே இஸ்லாமியராக சித்தரிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது///

தமிழ் சினிமா+ பதிவுலகத்தின் எழுதப்படாத விதி: கமல்ஹாசனைத்தவிர யார் வேணுமானாலும் இஸ்லாமியர்கள் உட்பட எல்லாச் சிறுபான்மையையும் எவ்வளவு கேவலமாகவும் சித்தரிக்கலாம். கமலஹாசன் மட்டும் அவர்களைப் பற்றி மூச்சுக்கூட விடக்கூடாது. ஏனென்றால் அவர் பிறந்த ஜாதி அப்படி.

ஆ.ஞானசேகரன் said...

//ஹைதரலி, ஷாஜகான், பாபர் காலத்து கதைதான் ஆதவன்.//

இப்ப வருகிற படமெல்லாம் அப்ப்டியே இருக்கு ஏன் என்று புரியவில்லை


படம் பார்த்தச்சா வாழ்த்துகள் நண்பரே

சொல்லரசன் said...

தீபாவளி வெளியீடு படங்கள் அனைத்தையும் பார்த்தபின் மொத்தமாக விமர்சனம் எழுதினால் நன்றாக இருக்கும்.விமர்சனம் எழுதும் நேரத்தில்
நீங்க ஒரு படம் பார்த்துவிடலாம்.உங்க விமர்சனத்தை படித்து வெளிவந்துள்ள படங்களில் எது ந‌ல்லபடம் என்று தெரிந்துகொண்டு போக எங்களுக்கு வசதியாக இருக்கும்

இன்றைய கவிதை said...

This is expected after 2 hits from Surya...

@Surya - Where is Director's Actor?!

அகநாழிகை said...

ஆதவன் படம் பற்றிய சரியான பார்வை.
நான் படம் முழுதும் பார்க்க முடியாமல் பாதியிலேயே வந்து விட்டேன். பேராண்மை ஓரளவிற்கு நன்றாக வந்திருக்கிறது.

- பொன்.வாசுதேவன்

மேவி... said...

அட பாவமே ..... அப்ப நமீதா காட்டின ஜகன் மோகனி படம் தான் பார்க்கணும் போல் இருக்கே .....

மேவி... said...

விமர்சனம் என்பது இலக்கியத்தில் சேர்த்தியா ???

Cable சங்கர் said...

ஆவரேஜ் படமா..?:( ஆனாலும் உங்களுக்கு வர வர மனசுல தைரியம் ஜாஸ்தியாயிட்டே வருது..

Jackiesekar said...

இன்னா வாத்தியாரே இப்பவெல்லாம் எந்த படத்தையும் விடறதில்லை போல இருக்கே...

Karthik said...

சூர்யாவும் களத்துல இறங்கிட்டாரா? குத்துங்க.. குத்துங்க.

விமர்சனத்துக்கு நன்றிங்ணா..:)

வால்பையன் said...

//வில்லன்கள் எல்லோருமே இஸ்லாமியராக சித்தரிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது.//

கல்லா கட்டுறதுக்கு தான்!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.

Prabhu said...

குருவிய மிஞ்சுற ஜம்ப் ஒண்ணு செஞ்சிருக்காராமே!

Prabhu said...

"வில்லன்கள் எல்லோருமே இஸ்லாமியராக சித்தரிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது".///

திரிய கொழுத்தி விட்டீங்களா?

Anonymous said...

nadodikalai kooda kurai sonavankal thane. ninkal oru padam edunko appa theriyum unkalukku. kanthashami jaijum kuraisonnavakkatha. unkalukkendu oru websideid opun pannikondu neenka ninaikirathuthan shari ennru sollathenkoda....

Mukundan said...

nalla sonnenga

First chasing scene superaaaah????

Sariaaah pochu. Athu appadiyee holywood copy. This bit came nearly 5 years ago. Check the link below the complete action scene from where they loot

http://www.youtube.com/watch?v=0la6hrMnyE4

குமரை நிலாவன் said...

நடு நிலை விமர்சனம்.

இரண்டு படமுமே பார்த்தாச்சு நண்பா
பேராண்மை இன்னொருமுறை பார்க்க வேண்டும்
ஒளிப்பதிவு அருமை .

"உழவன்" "Uzhavan" said...

எங்க தல இப்பெல்லாம் படத்துக்கு போகமுடியுது?
தியேட்டருக்குப் போய் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகுது :-)

தருமி said...

எனது இந்தப் பதிவைப் படித்த பிறகுதான் இப்படி மனம் மாறி சுடச்சுட எழுத ஆரம்பித்து விட்டீர்களோ?

காரணம் ஆயிரம்™ said...

ஜப்பான் அதிபர்-பீகார் முதல்வர் கதை தெரியுமா? “பீகாரை என்னிடம் தாருங்கள்.. மூன்றே வருடங்களில் அதை இன்னொரு ஜப்பானாக்கி காட்டுகிறேன்” என்றவருக்கு முதல்வரின் அதிர்ச்சிதரும் பதில் - “என்னிடம் ஜப்பானை கொடுங்கள். மூன்றே மாதத்தில் பீஹாராக்கி காட்டுகிறேன்”

அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது...

முதலில், கமல். இப்பொழுது சூர்யா! மாறிக்கொண்டிருக்கிறார்கள்.. :(

muthusivakumaran said...

இது போன்ற படங்களில் இனி சூர்யா நடித்தார் என்றால், விஜய்யுடன் இவரையும் சேர்த்து நாம் விலக்கி வைத்து விட வேண்டியது தான்

Ashok D said...

நல்லயிருக்குங்க விமர்சனம்

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com