October 28, 2009

ஊடல் பொழுதுகள்..!!!


மேகங்கள் ஏதுமற்ற பாழ்வெளியில்
சுற்றித்திரியும்
திசையறியாப் பறவையாய்
தத்தளித்துக் கிடக்கிறது மனது

தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி

எத்தனை முயற்சித்தும்
துயரத்தின் பள்ளத்தாக்குகளை
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறேன்

நெஞ்சை ஆற்றிச்செல்லும்
ஒற்றைப் பார்வைக்காய்
உன்னை நான் எதிர்நோக்க -
அமிலம் தோய்ந்த வார்த்தைகளால்
உனக்கான என் மொத்த அன்பையும்
சுக்கு நூறாக சிதறடிக்கிறாய்

கோபம் மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
மன்னிப்பு என்னும் கேடயம் ஏந்தி
என் மடி சாய்கிறாய்

மனதின் வலியை மறைத்தவளாய்
முகத்தில் புன்னகை தேக்கி
உன்னை அரவணைத்துக் கொள்கிறேன்

ஆனால் - அந்த
நொடிப்பொழுதின்
பின்னத்தில்
என்னருகே
இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!

40 comments:

சுந்தரா said...

பெண்ணின் உணர்வுகளை சிறப்பாய் வெளிப்படுத்தியிருக்கீங்க.

கவிதை அருமை.

வால்பையன் said...

//தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி//

செல்போன்லயே பேசிகிட்டு இருந்தா இடைவெளி இருக்கத்தான் செய்யும்! நேர்ல போய் பேசுங்க தல!

க.பாலாசி said...

//எத்தனை முயற்சித்தும்
துயரத்தின் பள்ளத்தாக்குகளை
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறேன்//

//கோபம் மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
மன்னிப்பு என்னும் கேடயம் ஏந்தி
என் மடி சாய்கிறாய்//

ரசித்த வரிகள்.

உணர்வுகளை மிக அழகாக பதிந்துள்ளீர்கள்.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கவிதை அருமை கார்த்திகைப்பாண்டியன்.. :))

நர்சிம் said...

வால்பையன் said...
//தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி//

செல்போன்லயே பேசிகிட்டு இருந்தா இடைவெளி இருக்கத்தான் செய்யும்! நேர்ல போய் பேசுங்க தல!
//

சுந்தரா said...
பெண்ணின் உணர்வுகளை சிறப்பாய் வெளிப்படுத்தியிருக்கீங்க.

கவிதை அருமை.
//

இரண்டு கருத்துமே என்னுடையதும்.

மிக நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்ததும் பிடித்திருந்தது. நொடிப்பொழுதின் பின்னம் உதாரணம்.

மேவி... said...

வீட்டில் உங்க மேட்டர் சிக்கிரம் சொல்லுங்க தல..... அப்படியே உங்க CUG நம்பர் மேட்டர் யும் சொன்ன நல்ல இருக்கும்

தருமி said...

ஓ ..!

தேவன் மாயம் said...

வாங்க கவிஞரே!
‘ஆனால் - அந்த
நொடிப்பொழுதின் பின்னத்தில்
என்னருகே இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!///

பின்னியெடுக்கிறீங்க!

மேவி... said...

ஏற்கனவே "கண்டேன் எஸ்.ராமகிருஷ்ணனை..!!!" என்ற உங்க பதிவில் ஏதோ சொல்லி இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ........ ரைட்டா

வினோத் கெளதம் said...

//பாழ்வெளியில்//

?

vasu balaji said...

/ஆனால் - அந்த
நொடிப்பொழுதின் பின்னத்தில்
என்னருகே இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!/

அருமை அருமை!

ஈரோடு கதிர் said...

வார்த்தைகளின் தேர்வு மிக அருமை

பாராட்டுகள் நண்பா

ஹேமா said...

கார்த்திக்,நீங்க ஒரு இலக்கியவாதின்னு மேவீ அடிக்கடி புகழ்வார்.

உணர்வோடு அசத்தலாருக்கு கவிதை.ஏன் என் கவிதைகள் சில புரியவில்லை என்கிறீர்கள்.நானும் இயல்பான வார்த்தைகளோடுதானே எழுதுகிறேன் !

ஆ.ஞானசேகரன் said...

இயல்பாய்,.. அசத்தல்,... அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

// வால்பையன் said...
செல்போன்லயே பேசிகிட்டு இருந்தா இடைவெளி இருக்கத்தான் செய்யும்! நேர்ல போய் பேசுங்க தல!//

//டம்பி மேவீ said...
வீட்டில் உங்க மேட்டர் சிக்கிரம் சொல்லுங்க தல..... அப்படியே உங்க CUG நம்பர் மேட்டர் யும் சொன்ன நல்ல இருக்கும்//

ஏன்யா இப்படி கிளப்பி விடுறீங்க.. நான் பாட்டுக்கு கைல வந்தத கிறுக்கினா அதுக்கு புதுசு புதுசா அர்த்தம் சொல்லாதீங்கப்பா.. செத்தாத்தான் சாவைப் பத்தி கவிதை எழுத முடியுமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//வினோத்கெளதம் said...
//பாழ்வெளியில்//
?//

கவிதை சொன்னா ரசிக்கணும்.. என்ன ஏதுன்னு எல்லாம் ஆராயக் கூடாது நண்பா.. ஹி ஹி ஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said...
கார்த்திக்,நீங்க ஒரு இலக்கியவாதின்னு மேவீ அடிக்கடி புகழ்வார்.//

அய்யய்யோ தோழி.. அவர் சொல்றதெல்லாம் நம்பாதீங்க.. தன்னுடைய நண்பர்களை எப்பவுமே ரொம்ப உயர்வா சொல்லக்கூடியவர் அவர்..

//உணர்வோடு அசத்தலாருக்கு கவிதை.ஏன் என் கவிதைகள் சில புரியவில்லை என்கிறீர்கள்.நானும் இயல்பான வார்த்தைகளோடுதானே எழுதுகிறேன் !//

நீங்க தொட்டுச் செல்லும் தளங்கள் சில நேரங்களில் அசாதாரணமாக இருப்பதால் அவற்றைப் புரிந்து கொள்ள சற்றே சிரமமாக இருக்கிறது.. அவ்வளவே..:-))

குமரை நிலாவன் said...

கவிதை அருமை நண்பா

அ.மு.செய்யது said...

வால் சொல்றது தான் மேட்டரா ??

அதான பார்த்தேன்.சும்மால்லாம் இப்படி எழுதிற முடியாதுல்ல..!

Karthik said...

அட்டகாசம்.. ரியலி.. :)

சிவக்குமரன் said...

மௌனம்- இது தீர்ந்தும் போகுமா என்ன?

kaarthihaiselvi said...

nice..
entha kavithaila erukra pennai unara mudiyuthu..!

நாடோடி இலக்கியன் said...

அருமை நண்பா.

வார்த்தைகள் முத்து முத்தாய்.

தீப்பெட்டி said...

//தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி//

கவிதை ரசிக்கும்படி இருக்கிறது பாஸ்..

RAMYA said...

//
கோபம் மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
மன்னிப்பு என்னும் கேடயம் ஏந்தி
என் மடி சாய்கிறாய்
//

யதார்த்தம் இழையோடிய கவிதை வரிகள் அருமை சகோ!!

RAMYA said...

//
வால்பையன் said...
//தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி//

செல்போன்லயே பேசிகிட்டு இருந்தா இடைவெளி இருக்கத்தான் செய்யும்! நேர்ல போய் பேசுங்க தல!
//

அப்படியா இதென்னா புது கலாட்டா கார்த்திக் சொல்லவே இல்லே :))

RAMYA said...

//
ஆனால் - அந்த
நொடிப்பொழுதின் பின்னத்தில்
என்னருகே இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!
//


அருமை! உணர்ந்து எழுதிய வரிகள்
அதில் வலி தெரிகிறது.

ச.பிரேம்குமார் said...

பாண்டியன், என்ன நடக்குது அங்கே????

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்கு நண்பா..

velji said...

சரிதான்.அமில வார்த்தைகள் மனசை அரித்தால் அரவணைக்கும் உறவு வாய்க்குமா.
நல்ல கவிதை.

நசரேயன் said...

//ஆனால் - அந்த
நொடிப்பொழுதின் பின்னத்தில்
என்னருகே இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!//

ஏன் பர்ஸ்ல காசு இல்லையா ?

thiyaa said...

/////

கோபம் மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
மன்னிப்பு என்னும் கேடயம் ஏந்தி
என் மடி சாய்கிறாய்

மனதின் வலியை மறைத்தவளாய்
முகத்தில் புன்னகை தேக்கி
உன்னை அரவணைத்துக் கொள்கிறேன்

////

வரிகள் பிடிச்சிருக்கு
நல்ல கவிதை

cheena (சீனா) said...

அன்பின் காபா

அருமை அருமை கவிதை அருமை ‍ சொல்லாடல் அருமை. பொதுவாக காதல் கவிதைகள் ஆணை முன்னிலைப்படுத்தி எழுதப்படும். இங்கு ஒரு பெண்ணின் மனக்குமுறல் அழகாகச் சொல்லப்படுகிறது. ஒற்றைப்பார்வை எதிர்பார்க்கும் நேரத்தில் அமிலமழை பொழிந்தால் என்ன ஆவது ? கோபம குறையும் போது, மன்னைப்பு என்னும் போர்வையில் மடி சாயும் போது, வலி மறைத்து ( மறந்து ), புன்னகையுடன் மடி சாயும் அவளது குனம் பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று.

நல்ல கற்ப்னை வளம் ‍ நல்ல சொல்லாடல் ‍ நல்வாழ்த்துகள் காபா

அன்புடன் நான் said...

பெண்ணின் உணர்வுகளை சிறப்பாய் வெளிப்படுத்தியிருக்கீங்க அருமைங்க.

☀நான் ஆதவன்☀ said...

அருமையாக இருக்கிறது நண்பா

அத்திரி said...

அய்யய்யோ புரொபசர் என்னாச்சு ஏதாவது லவ்வு..........

ச.முத்துவேல் said...

எங்கியோஓஓஓஒ... போயிட்டீங்க. யே...யப்பா!!!!

Rajalakshmi Pakkirisamy said...

//தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி//

Good :)

"உழவன்" "Uzhavan" said...

கலக்கல் தல :-)

பாலகுமார் said...

//ஆனால் - அந்த
நொடிப்பொழுதின் பின்னத்தில்
என்னருகே இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!//

அருமை, எழுத்து மெருகு கூடிக்கிட்டே போகுது கார்த்தி :) வாழ்த்துக்கள் !